சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நள்ளிரவில் நடந்த டீலிங்.. "2 மணி நேரம்".. ஹோட்டல் ரூமில் அமித்ஷா பேசியது என்ன.. பரபர தகவல்

எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா விவாதித்தது என்ன என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: மொத்தம் 2 மணி நேரம்.. நள்ளிரவில் அமித்ஷா நடத்திய டீலிங் என்ன என்பது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.

Recommended Video

    அதிமுக-பாஜக இடையே நள்ளிரவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை.. அமித்ஷா பேசியது என்ன?

    பாஜகவுடன் அதிமுகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.. சீட் எவ்வளவு என்பதும் இழுபறியாக இருக்கிறது.. 6 மாதமாகவே கூட்டணியில் இது தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில்தான், அமித்ஷாவும், பிரதமரும் மாறி மாறி தமிழகம் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.. நேற்றுகூட அதிமுக தலைமையிடம் அமித்ஷா பேசியதாக தெரிகிறது..

     பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    எடுத்த எடுப்பிலேயே 35 சீட் என்றுதான் ஆரம்பித்தாராம் அமித்ஷா.. அடுத்து 30 சீட் என்று பேச்சை தொடர்ந்துள்ளார்.. பாமகவுக்கு தந்ததுபோலவே தங்களுக்கும் சீட் அதிகமாக வேண்டும் என்பதுதான் பாஜக தலைமையின் டிமாண்ட்.. ஆனால், அந்த அளவுக்கு அதிமுகவில் தர சான்ஸ் இல்லை என்கிறார்கள்.. வேண்டுமானால் 20 - முதல் 25 சீட் வரை வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

     அமித்ஷா

    அமித்ஷா

    10 மணிக்கு ஹோட்டலுக்கு அமித்ஷா வந்துள்ளார்.. ஆனால், 1 மணிக்குதான் கிளம்பி டெல்லி சென்றுள்ளார்.. நள்ளிரவு வரை ஓபிஎஸ், எடப்பாடியாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறுகிறார்கள்.. எத்தனையோ முறை சீட் ஒதுக்கீடு பற்றி பேசி இருக்கிறார்கள்.. அப்போதெல்லாம் இவ்வளவு நேரம் ஆனதில்லை.. கொஞ்ச நாட்களாகவே சசிகலா விவகாரத்தை பாஜக ஆரம்பிக்கவே இல்லை என்பதால், அது தொடர்பாகவும் பேசியிருக்க வாய்ப்பிருக்காது.. அப்படியானால், வெறும் தொகுதி உடன்பாட்டை மட்டுமா இவ்வளவு நேரம் பேசியிருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது.

     பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்த ரிப்போர்ட் ஒன்று ஏற்கனவே பாஜக தலைமைக்கு சென்றுள்ளது.. இந்த ரிப்போர்ட்டை கையில் வைத்து கொண்டுதான், பேச்சுவார்த்தைகளை அமித்ஷா நடத்தி வருகிறார்.. தென் மாவட்டங்களில் சசிகலாவால் அதிமுக ஓட்டு பிரியாது என்றால், தைரியமாக தென்மண்டலங்களிலேயே அதிமுக பெருவாரியான இடங்களில் நிற்கலாமே? தங்களுக்கு கொங்கு மண்டலத்தை ஒதுக்கி தந்து விடலாமே? என்ற ரீதியில்தான் பேச்சு நடந்து வருகிறது.

     பாஜக மண்

    பாஜக மண்

    தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி, தஞ்சை பகுதி, கொங்கு மண்டலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கான இடங்கள் ஓரளவு இருக்கின்றன.. ஆனால், இந்த பகுதிகளில் அதிமுகவுக்கும் சாதகமான களம் இருக்கிறது.. அதனால்தான், சீட் ஓரளவு ஒதுக்கினால்கூட, தொகுதிகளில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷா அநேகமாக இது குறித்துதான் அதிமுக தலைமையிடம் பேசியிருப்பார் என்கிறார்கள்.

     கள நிலவரம்

    கள நிலவரம்

    அதுமட்டுமல்ல, திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களிலும் அமித்ஷாவின் கவனம் குவிந்துள்ளதாம்.. அந்த தொகுதிகளின் தற்போதைய கள நிலவரத்தையும் மாற்றியமைக்கும் வியூகத்தையும் அமித்ஷா கையில் எடுத்திருக்கலாம், அது குறித்தும் விவாதித்திருக்கலாம் என்றும் யூகத்துடன் சிலர் சொல்கிறார்கள்..

     பிளான்கள்

    பிளான்கள்

    திமுகவின் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் அதிமுக, பாஜக எப்படியெல்லாம் மக்களை கவர்ந்து ஓட்டுக்களை பெற வேண்டும் என்பது குறித்த ஸ்கெட்சும் போடப்பட்டிருக்கலாம்.. ஆக மொத்தம் நள்ளிரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணி வெற்றிக்கான பிளான்களும், திமுகவை டேமேஜ் செய்ய கூடிய ஐடியாக்களும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் கசிந்து வரும் தகவல் என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விடை தெரியவரும்!

    English summary
    Amit Shah discussed two hours with CM Edapadi Palanisamy and OPS
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X