சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது வெட்கக்கேடானது.. கொதித்த கனிமொழி.. தமிழிசை அதிர்ச்சி.. முத்தலாக்கிற்கு கொடுத்த ரியாக்சன்!

முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்

    சென்னை: முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக எம்பி கனிமொழி இதற்கு எதிராக கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    பல கட்சிகளின் எதிர்ப்பை மீறி ராஜ்யசபா மற்றும் லோக்சபா இரண்டிலும் முத்தலாக் தடை சட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதன் மூலம் முத்தலாக் நடைமுறை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

    அதிமுக இல்லை

    அதிமுக இல்லை

    மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பில் அதிமுக கலந்து கொள்ளாமல் வெளியேறி உள்ளது. அதிமுக மசோதாவை எதிர்த்தது. ஆனால் 11 எம்.பிக்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களிக்காமல் வெளியேறினார்கள். இது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. மொத்தம் 30 எம்பிக்கள் இப்படி இன்று வெளியேறினார்கள்.

    கனிமொழி என்ன

    கனிமொழி என்ன

    இந்த நிலையில் அதிமுக வெளியேற்றம் குறித்து திமுக எம்பி கனிமொழி கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது, என்றுள்ளார்.

    என்ன எதிர்ப்பு

    என்ன எதிர்ப்பு

    இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்த மசோதா நிறைவேறியது. ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. இது இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்கும். முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் மோடியை வாழ்த்துவோம். வேலூர் தேர்தலுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேலுார் தேர்தலுக்காக முத்தலாக் விவகாரத்தில் அதிமுக யு டர்ன் அடித்துள்ளது, என்றுள்ளார்.

    அமித் ஷா கருத்து

    அமித் ஷா கருத்து

    இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய ஜனநாயகத்தில் இது மிக முக்கியமான நாள். சட்டத்தை நிலைநாட்டுவதில் மிக உறுதியுடன் செயல்படும் பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். இந்த சட்டம் இஸ்லாமிய பெண்களை மோசமான பழக்கத்தின் சாபத்தில் இருந்து விடுவிக்கும். இந்த மசோதாவை ஆதரித்த எல்லா கட்சிக்கும் நன்றியை கூறுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Amit Shah, Kanimozhi and Tamilisai reaction on Triple Talaq bill passage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X