சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறித்தனமாக இருக்கிறது.. அமித் ஷாவை சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதி இருந்த நிலையில், . இதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். முதல்வரின் தாயார் மறைவுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அவரின் இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையானது.

Amit shah mourns death of Chief Ministers mother in Hindi: Ponnaiyan condemned

இதற்கு கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டத்தை சகித்துக்கொள்ள முடியாது. இந்த போக்கு தமிழுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் எழுதுவதை தான் படிக்க வேண்டும் என்கிற இந்தி ஆதிக்கவெறி மனப்பான்மை இந்தியாவை கூறுபோட்டுவிடும். இந்தி தெரியாது எனக்கூறி அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதத்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் இந்த பிரச்னை குறித்து பேசும் போது, "அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை. இருப்பினும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால், இந்தி திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு" என்றார்..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பகிரங்கமாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Union Home Minister Amit Shah had written a letter of condolence in Hindi for the death of Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy 's mother. AIADMK ex-minister Ponnaiyan has condemned this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X