சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் தோத்தீங்க.. செம டென்ஷனில் அமித்ஷா.. பதில் சொல்ல முடியாமல் திணறிய ஐவர்!

தேர்தல் தோல்வி குறித்து தமிழக பாஜகவிடம் அமித்ஷா விளக்கம் கேட்டதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவினர் மீது செம டென்ஷனில் இருக்கும் அமித்ஷா

    சென்னை: என்ன பதில் சொல்றது, எப்படி மேலிடத்தை சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் கையை பிசைந்து நின்றதாம் தமிழக பாஜக!

    தேசிய கட்சி என்றாலும் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு ஆஹா ஓஹோன்னு இல்லை. இப்படி ஒரு கட்சி இருப்பதே 20 வருஷத்துக்கு முன்னாடி தமிழகத்தில் சாமான்ய மக்களுக்கு தெரியாது.

    அயோத்திய பிரச்சனை, வாஜ்பாயின் நல்ல மனசு, அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் செயல்பாடுகளுக்கு பிறகுதான் பாஜக வேகம் எடுத்தது. அதிலும் மோடி வந்த பிறகு கட்சியை வேற லெவலுக்கு கொண்டு போய்விட்டார்.

    இப்டி கெக்கேபிக்கேனு சிரிச்சுக்கிட்டே ப்ரே பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பாரு பாஸ்? இப்டி கெக்கேபிக்கேனு சிரிச்சுக்கிட்டே ப்ரே பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பாரு பாஸ்?

    கல்லடி பட்ட மரம்

    கல்லடி பட்ட மரம்

    இந்த சமயத்தில் தமிழகத்திலும் பாஜகவின் தொண்டர்கள் அதிகமாக தொடங்கினர். மாநில தலைமைக்கு தமிழிசை நிறுத்தப்பட்டார். இந்துத்துவா தீவிரம், சிறுபான்மையினர் நசுக்கப்படுதல், தமிழக பாஜக தலைவர்களின் சர்ச்சைகள் போன்றவற்றிற்கு கல்லடி பட்ட மரமானார் தமிழிசை! பாஜகவுக்காக இல்லை என்றாலும், தமிழிசைக்காகவே "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற அவரது வாசகத்தை தமிழக மக்கள் மனங்களில் நிறுத்தி கொண்டனர். எல்லாமே தமிழிசைக்காகத்தான்!

    ஜாம்பவான்கள்

    ஜாம்பவான்கள்

    ஆனால் போட்டியிட சீட் தந்ததே 5 இடங்களுக்குத்தான். இந்த 5 இடங்களிலுமே முக்கிய நபர்கள்தான் நின்றார்கள். கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், கோவையில் சிபி ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா என்ற ஜாம்பவான்கள்தான் களத்தை சந்தித்தனர்.

    5 பேரும் தோல்வி

    5 பேரும் தோல்வி

    அதிலும் தமிழிசை கேட்ட தொகுதியோ வேறு, ஒதுக்கப்பட்டதோ வேறு! ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. மாநில தலைவரே தோற்று போனார், மத்திய இணை அமைச்சரே மண்ணை கவ்வினார், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரனோ ஏமாற்றம் தந்தனர். எப்படியும் தோற்று போவார் என்று ஏற்கனவே உறுதியாக தெரிந்தது எச்.ராஜாதான்!

    தாமரை மலர வேண்டும்

    தாமரை மலர வேண்டும்

    இத்தனைக்கும் இவர்களுக்காக பாஜக தலைவர்களே டெல்லியில் இருந்து வந்து பிரச்சாரம் செய்தார்கள். இதுவரைக்கும் எப்படியோ தெரியாது, இனிமேல் தாமரை தமிழகத்தில் மலர்ந்துதான் தீர வேண்டும் என்று பிரச்சாரத்திற்கு வந்தபோது கண்டிப்புடன் சொல்லி விட்டு போனார் அமித்ஷா!

    எதுவும் தெரியவில்லை

    எதுவும் தெரியவில்லை

    ஆனால் தமிழக மக்கள் கணக்கு வேறாகிவிட்டது. கேட்ட சீட், கேட்ட தொகுதிகள், எல்லாம் கொடுத்தும் தோற்று விட்டதால், எப்படி பாஜக தலைமையின் முகத்தில் விழிப்பது என்று தமிழக பாஜக திணறி வருகிறது. மோடி பதவியேற்பு விழாவுக்கு போனார்களா, என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள், என்ன நடந்தது என்று எதுவுமே தெரியவில்லை.

    திணறினார்கள்

    திணறினார்கள்

    ஏற்கனவே தமிழகத்தில் பாஜக ஏன் தோத்து போனது என்று விளக்கம் கேட்கப்பட்டது. நேற்று நேரிலும் அமித்ஷா விளக்கம் கேட்டதாக சொல்கிறார்கள். தங்கள் தொகுதிகளில் யார் யார் எவ்வளவு ஓட்டுகள் வாங்கினார்கள், தோல்விக்கு என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகளை கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறினார்களாம் இந்த 5 பேரும்! தோல்விக்கான காரணத்தை தமிழக பாஜக விரைவில் ஆராய்ந்து சரி செய்வது இனி நல்லது!

    English summary
    In Tamil Nadu, the BJP has failed in 5 seats. Amit Shah has been asked by the Tamil Nadu BJP for the cause of the election failure
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X