சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா.. தொண்டர்களை பார்த்தவுடன் இறங்கி நடந்தே பயணம்

Google Oneindia Tamil News

சென்னை: விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட போது இரு மருங்கிலும் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததால் அவர் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்தே சென்றார்.

சென்னையில் ரூ 62 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் சென்னைக்கு வந்துள்ளார்.

Amit Shah steps down his car

இரு நாட்கள் பயணமாக வந்துள்ள அமித்ஷாவை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அது போல் பாஜக நிர்வாகிகளும் புடைச் சூழ அமித்ஷாவுக்கு வரவேற்பளித்தனர்.

இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா காரில் புறப்பட்டார். அப்போது சாலையின் இரு புறமும் அதிமுக, பாஜக தொண்டர்கள் நின்றிருந்தனர்.

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு - வட சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு - வட சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, சிறிது தூரத்திற்கு நடந்தே சென்றார். அப்போது சாலையில் உள்ள தொண்டர்களுக்கு அமித்ஷா கையசைத்தார். தொண்டர்களும் ஆரவாரம் செய்தனர்.

அவருடன் தமிழக பாஜக தலைவர் எல் முருகனும் பாதுகாப்பு அதிகாரிகளும் நடந்தே வந்தனர். பின்னர் காரில் அமர்ந்து லீலா பேலஸை அடைந்தார் அமித்ஷா.

English summary
Amit Shah steps down his car and walks at least a kilometer waving BJP and AIADMK cadres who have gathered to welcome him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X