சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல் பாதிப்பு... தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்... முதலமைச்சரிடம் அமித்ஷா உறுதி..!

Google Oneindia Tamil News

சென்னை: புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்ய தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Amitsha assured cm edappadi palanisami all possible help from centre

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகிய இருவரையும் தொலைபேசி மூலம் இன்று காலை தொடர்புகொண்டு பேசிய அமித்ஷா மழை வெள்ளம் மற்றும் புயலின் தாக்கம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தேவையான உதவிகளை செய்து வருவதையும் அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு மாநில அரசுகளும் சேத விவரங்களை தெரியப்படுத்திய பிறகு முதற்கட்டமாக மத்திய அரசு குறிப்பிட்ட நிதியை கொடுக்கக்கூடும்.

 தானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன் தானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்

நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் சேத விவரங்கள் குறித்து வருவாய்த்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இன்று மாலைக்குள் அல்லது நாளை காலை புயலால் ஏற்பட்டுள்ள சேத மதிப்பின் முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Amitsha assured cm edappadi palanisami all possible help from centre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X