சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே சின்னம், உடனே வேண்டும்.. தேர்தல் ஆணைய கதவை தட்டியது அமமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது.. உச்சநீதிமன்றம்- வீடியோ

    சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தரப்பு, இன்று முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வரும் லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத் தேர்தல்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தது.

    ஆனால் பதிவு செய்யப்படாத அந்த கட்சிக்கு பொதுவான ஒரு சின்னமாக குக்கரை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    விடுகதையா இந்த வாழ்க்கை... அத்வானியை தொடர்ந்து ஜோஷியையும் கழட்டிவிட்ட மோடிவிடுகதையா இந்த வாழ்க்கை... அத்வானியை தொடர்ந்து ஜோஷியையும் கழட்டிவிட்ட மோடி

    ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    இருப்பினும் மிகக் குறுகிய காலமே இருப்பதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாவிட்டாலும், பொதுவான ஒரு சின்னத்தை தினகரன் தரப்புக்கு ஒதுக்குவதுதான், ஆரோக்கியமான தேர்தல் களத்துக்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    இந்த நிலையில் தினகரன் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம், ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி தங்கள் வேட்பாளர்கள் அனைவருக்குமே பொதுவான ஒரு சின்னத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பரிந்துரை

    பரிந்துரை

    பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்கீடு செய்தேயாக வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு எதையும், பிறப்பிக்க விட்டாலும், பொது சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு, பரிந்துரை செய்தது.

    எப்போது சின்னம்

    எப்போது சின்னம்

    இருப்பினும், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்ற பரிந்துரையை பின்பற்றும் என்று தெரிகிறது. எப்போது, சின்னம் ஒதுக்கப்படும் என்பதுதான் இன்னும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

    English summary
    TTV Dinakaran's Amma Makkal munnetra kazhagam party officially submitted application to the election commission seeking a common simple has to be allotted for their candidates for the upcoming Lok Sabha and Tamil Nadu by election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X