சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. "அம்மா" சொன்னதும் கப்சிப்!

ரவுடியை காதலித்த சிறுமிக்கு அம்மா பேட்ரோல் அறிவுரை வழங்கி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Amma Patrol | ரவுடியை காதலித்த 16 வயது சிறுமி..அம்மா பேட்ரோலின் அதிரடி செயல்

    சென்னை: யார் சொன்னாலும் சரி.. அந்த ரவுடியைதான் லவ் பண்ணுவேன் என்று ஒத்தை காலில் நின்றார் 16 வயது மாணவி! ஆனால் "அம்மா" சொன்னதும் அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு அடங்கி போய்விட்டார்!

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல வகைகளில் தமிழக அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு பிங்க் நிற ரோந்து வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக 20 இனோவா கார்களின் சேவையை சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்...! உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜிஇலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்...! உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இந்த பிங்க் வண்டி.. ஜெயலலிதாவை நினைவில் கொள்ளும் வகையில் ''அம்மா பேட்ரோல்'' என்ற பெயரில் அறிமுகம் ஆகி உள்ளது. குழந்தைகளுக்காக 1098 என்ற ஹெல்ப்லைன் எண்ணும், பெண்களுக்காக 1091 என்ற எண்ணும் இந்த வாகனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    குழந்தைகள் பாதுகாப்பு

    குழந்தைகள் பாதுகாப்பு

    குழந்தைகள் பெண்கள் மட்டுமில்லை.. வயசானவர்களுக்கும் இந்த திட்டம் உதவும். பெரிய அளவு கொடூரங்களை நடக்க விடாமல் மட்டுமில்லை.. யாராவது பெண்களை கேலி செய்தாலே போதும்.. அதிரடியாக களத்தில் இறங்கி தடுப்பதுதான் இந்த பிங்க் முக்கிய வேலை. கடந்த 26-ந்தேதி முதல் இப்போது வரை சுமார் 3200 அழைப்புகள் இந்த சேவைக்கு வந்துள்ளதாம். அப்படித்தான் ஒரு சேவையை நேற்றும் செய்துள்ளது.

    16 வயது சிறுமி

    16 வயது சிறுமி

    திருவேற்காட்டை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவனை காதலித்துள்ளார். அந்த இளைஞர் ஒரு ரவுடியாம். அவர் மீது ஏகப்பட்ட, கொலை உள்ளிட்ட கேஸ்கள் பல ஸ்டேஷனில் உள்ளதாம். இதனால் பெண்ணின் தந்தை கண்டித்து இருக்கிறார். பையன் சரியில்லை... பேசவும், பழகவும் கூடாது என்று சொல்லியும், மகள் கேட்கவே இல்லை.

    அட்வைஸ்

    அட்வைஸ்

    அவன் ஒரு ரடிவு என்று சொல்லியும் நம்பவும் இல்லை. என்னசெய்வதென்றே தெரியாத தந்தை, போலீஸ் கன்ட்ரோல் ரூமூக்கு போன் போட்டு சொன்னார். அதன்படி போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசார் மூலமாக மாணவிக்கு அட்வைஸ் செய்ய முடிவு செய்தனர். இதனடிப்படையில் அம்மா ரோந்து வாகனத்தில் வரும் பெண் காவலர்கள் அந்த மாணவியை கூப்பிட்டு பேசினார்கள்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இளைஞரை காதலிப்பதை நிறுத்தி கொள்ளுமாறும், உண்மையிலேயே அந்த ரவுடி மீது நிறைய வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்தனர். அப்படி பெண் போலீசார் சொன்னதுமே அதை மாணவி அதனை ஏற்றுக் கொண்டுவிட்டார். அதேபோல, அந்த இளைஞரையும் கூப்பிட்டு இனிமேல் மாணவியுடன் பழகக்கூடாது, நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    ரவுடி ஒருவரை பள்ளி மாணவி காதலிப்பதாக வந்த புகாரைகூட அம்மா ரோந்து வாகன போலீசார் தீர்த்து வைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    English summary
    16 year old girl loves Rowdy and AMMA Patrol advised her near Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X