சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உருவானது அமமுக கூட்டணி.. எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை... தினகரன் அறிவிப்பு

எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கினார் தினகரன்

Google Oneindia Tamil News

சென்னை: அமமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

40 தொகுதிகளிலும் தனித்துபோட்டி என்று தினகரன் ஏற்கனவே சொல்லி விட்டார். ஆனால் எஸ்டிபிஐ தவிர இதுவரை அந்த கட்சியில் வேறு யாரும் கூட்டணி வைத்த மாதிரி தெரியவில்லை.

தினகரனுடன் எதற்காக கூட்டணி வைத்தோம் என்பதற்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஒரு நீண்ட விளக்கமே அப்போது தரப்பட்டது.

அடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்அடுத்தடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் விஐபிகள்.. விஷயம் சிக்கல்தான்

சரியான மாற்று

"மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் நாடு முழுவதும் பாசிச சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பாஜகவின் பாசிச சக்தியை கண்டித்தே அமமுகவுன் கூட்டணி வைத்துள்ளோம். அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிரான சரியான மாற்று என்பது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கைகோர்ப்பது தான்" என்று காரணம் சொல்லப்பட்டது.

 மத்திய சென்னை

மத்திய சென்னை

அதேபோல, அமமுகவில் இணைந்தவுடனேயே எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு என தினகரன் அறிவித்திருந்தார். ஆனால் எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது கூடி பேசி அறிவிக்கிறோம் என்று சொல்லி இருந்தனர். அதன்படி இன்று மத்திய சென்னை மக்களவை தேர்தலில் அமமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ போட்டியிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் வேட்பாளராக தெகலான் பாஹ்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மய்யம்

மய்யம்

மத்திய சென்னையை எஸ்டிபிஐக்கு ஒதுக்க காரணம், இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால்தான். இந்த தொகுதிக்குள், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு என பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர். அதனால்தான் இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமீலா நாசரும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

கமீலா நாசர்

கமீலா நாசர்

மத்திய சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தாலும், ஒரு பக்கம் தயாநிதி மாறன், இன்னொரு பக்கம் எஸ்டிபிஐ, மற்றொரு பக்கம் கமீலா நாசர், இதற்கு நடுவில், கோகுல இந்திரா என வேட்பாளர்கள் களமிறங்க... "நட்சத்திர தொகுதி" தொடர்ந்து என்ற பெயரை தக்க வைத்து வருகிறது.

English summary
TTV Dinakaran has announced Central Chennai for SDPI in AMMK Alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X