சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மச்சானை பார்ப்பாரா? கட்சியை பார்ப்பாரா?.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்!

மதுரை தொகுதி அமமுக வேட்பாளராக சீமானின் மச்சான் போட்டியிட உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீமான் மச்சானை பார்ப்பாரா? கட்சியை பார்ப்பாரா?

    சென்னை: அரசியலா, குடும்பமா என்ற குழப்பம் இன்று மட்டுமல்ல.. அன்றிலிருந்தே அரசியல்வாதிகளுக்கு ஒட்டிக் கொண்டு வருவதுதான்! இதற்கு சீமானும் விதிவிலக்கல்ல!

    தமிழக அரசியலில் மாமன் மச்சான், அப்பா மகன், அண்ணன் தம்பி என தேர்தல் களத்தில் மோதுவதும், அரசியல் செய்வதும் புதிதல்ல.

    பெரும்பாலும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு அரசியல் செய்வார்கள். சிலர் எல்லாவற்றையும் தாண்டி நிஜமாகவே மோதிக் கொண்ட வரலாறும் உண்டு. மறைந்த தாமரைக்கனி - மகன் இன்பத்தமிழன் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    வட போச்சே... குமுறும் அதிமுக நிர்வாகிகள்.. குடுமி பிடி சண்டை.. மறுபக்கம் பாஜக பிரஷர் வேற! வட போச்சே... குமுறும் அதிமுக நிர்வாகிகள்.. குடுமி பிடி சண்டை.. மறுபக்கம் பாஜக பிரஷர் வேற!

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    இதுபோலவே, பாமக தலைவர் குடும்பத்திலும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் அவரது சம்பந்தி கிருஷ்ணசாமி ஆகிய இருவருக்கும் இடையே இதுவரை மோதல் ஏற்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக அன்புமணிக்கும், கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்துக்கும் இடையே பூசல் வெடித்துள்ளது. ஆனால் நல்லவேளையாக ஒரே தொகுதியில் மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

    தமிழிசை

    தமிழிசை

    இன்னொரு பக்கம் அப்பாவும், சித்தப்பாவும் காங்கிரஸ், மகள் தமிழிசை தீவிர பாஜக தலைவர். வார்த்தை விளையாட்டில் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை அப்பாவும், மகளும் சண்டை போட்டுக் கொண்டதில்லை. படு ஆரோக்கியமான அரசியல் மற்றும் உறவுகளை அவர்கள் பேணி வருகிறார்கள்.

    [உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்]

    காளிமுத்து மகன்

    காளிமுத்து மகன்

    தற்போது இந்த தர்மசங்கடம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளை திருமணம் செய்துள்ளார். மனைவியின் சகோதரர் அதாவது மைத்துனர்தான் டேவிட் அண்ணாதுரை. இவர் மதுரை தொகுதியின் அமமுகவேட்பாளர் ஆவார்.

    மதுரை தொகுதி

    மதுரை தொகுதி

    இப்போது சீமான் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று சொல்லி இருக்கிறார். 23-ம் தேதி பட்டியலை அறிவிக்க இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். அப்படியானால் சொந்த மச்சானை எதிர்த்து மதுரையில் வேட்பாளரை நிறுத்துவாரா? என்பது சந்தேகமாக எழுந்துள்ளது.

    குடும்பமா? கட்சியா?

    குடும்பமா? கட்சியா?

    அப்படியே வேட்பாளர் நிறுத்தினாலும், அவரது பிரச்சாரம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. சீமானுக்கு குடும்பம் முக்கியமா, கட்சி முக்கியமா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அமமுக, நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே பலமாக எழுந்துள்ளது.

    English summary
    In Madurai Constituency Seeman's brother-in-law David Annadurai is contesting on behalf of AMMK. There is an expectation of how Seeman is going to campaign in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X