சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் டஃப் கொடுக்க களம் இறக்கப்படுகிறார் சாருபாலா தொண்டைமான்.. தினகரன் "நச்" மூவ்!

திருச்சி தொகுதியில் அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமான் போட்டியிட வாய்ப்பு என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சியில் களம் இறக்கப்படுகிறார் சாருபாலா தொண்டைமான்- வீடியோ

    சென்னை: திருச்சி தொகுதியையே பெரும்பாலான தலைவர்கள் மையம் கொண்டு இருக்கிறார்கள். இதனால் வேட்பாளர் தேர்வும் படு வேகமாகவே அங்கு நடந்து வருகிறது.

    கிட்டத்தட்ட பெரும்பாலான கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு சம்பந்தமாக அறிவித்து விட்டது. இதற்கு அடுத்த கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையிலும் இறங்க தொடங்கி உள்ளது.

    அதன்படி எல்லோர் கண்ணும் முதலில் பாய்ந்தது திருச்சியை நோக்கிதான். அதிமுக தரப்பில் கூட்டணியை பொறுத்தவரை புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டமான் போட்டியிட போகிறார் என்பது உறுதியாகி விட்ட ஒன்றாக சொல்லப்பட்டது.

    லலிதா குமாரமங்கலம்?

    லலிதா குமாரமங்கலம்?

    ஆனால் தற்போது பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், லலிதா குமாரமங்கலம் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என முன்கூட்டியே விவாதிக்கப்பட்டது. ஏனெனில், இவர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி என்பதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளவர் என்பதால், பாஜகவினர் இவரை களம் காண வைக்க வரிந்து கட்டிக் கொண்டுள்ளனர்.

    கே.என். நேரு

    கே.என். நேரு

    அதேபோல திமுக கூட்டணியில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடையே நிகழும் உட்கட்சி பூசலை தவிர்க்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருச்சி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

    சாருபாலா தொண்டைமான்

    சாருபாலா தொண்டைமான்

    இப்படி எல்லோருமே பலம் வாய்ந்தவர்களாக நிறுத்தப்படுவதால், அமமுக அதேபோன்ற ஒரு செல்வாக்கு மிக்க நபரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அவர்தான் சாருபாலா தொண்டைமான். இவரது மூதாதையர்கள் புதுக்கோட்டையில் மன்னராக இருந்ததாலும், இப்போதும் சாருபாலாவுக்கு திருச்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாலும்தான் இவரை செலக்ட் செய்திருக்கிறாராம் தினகரன்.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    அது மட்டுமில்லை, வாண்டையர் சமூகத்தின் ஓட்டுக்கள் கணிசமாக இவருக்கு விழ வாய்ப்புள்ளதாம். மகளிருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவும் இவர் காங்கிரசில் இருந்ததில் இருந்தே தொகுதியை பற்றி நன்றாக தெரிந்தவர் என்பதாலும்தான் டிடிவி இவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் அதிமுக மற்றும் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கும் டஃப் கொடுக்க இவரால் கண்டிப்பாக முடியும் என்பதே பொதுவான கணிப்பாக உள்ளது.

    English summary
    Chaarubala thondaiman may contest in Trichy Constitution on behalf of the AMMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X