சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'மிஷன்' தேனி என்னாச்சு? புது 'டார்கெட்' தருமபுரி - டிடிவியின் எதிர்பாரா மூவ்

Google Oneindia Tamil News

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அமமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1999 மற்றும் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 1999-ல் மட்டும் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-க்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத டிடிவி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் எம்எல்ஏவாக இருந்த ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார்.

தற்போது தனது இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ள டிடிவி தினகரன், தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ளார்.

 கூட்டணிக்கு தலைமை... முதல்வர் வேட்பாளர் - டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லக்காரணம் இதுதானா? கூட்டணிக்கு தலைமை... முதல்வர் வேட்பாளர் - டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லக்காரணம் இதுதானா?

 மறுக்கும் முதல்வர்

மறுக்கும் முதல்வர்

டெல்டாவில் அமமுகவின் பலமறிந்து பாஜக அவர்களுக்கு தூண்டில் போட்டாலும், முதல்வர் பழனிசாமி தொடர்ந்து அடம் பிடிப்பதால், 'அடப் போங்கப்பா' மோடில் கடுப்பான பாஜக தரப்பு, 'விரைவில் தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை நடத்துங்கள்' என்ற செய்தி கலந்த உத்தரவை அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமமுக கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கியது. தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட பழனியப்பன் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

 தேனி மாவட்டம்

தேனி மாவட்டம்

ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் உட்பட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று தினகரன் கூறியிருந்தார். இதில், இரண்டாவது தொகுதியாக தேனி மாவட்டத்தின் கம்பம், போடி, அல்லது ஆண்டிப்பட்டியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

 களமிறங்குகிறாரா டிடிவி?

களமிறங்குகிறாரா டிடிவி?

இந்த தொகுதியின் முதல் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற பழனியப்பன், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். இங்கு வன்னியர் சமூகத்தினர் அதிக அளவிலும், பட்டியல் இனத்தவர்களும், கொங்கு வேளாளர் சமூகத்தினரும் பரவலாக வசிக்கின்றனர். இவர்கள் தவிர, இதர பிற்படுத்தப்பட்ட பல்வேறு சமூக மக்களும் இத்தொகுதியில் வசிக்கின்றனர். தற்போது, அதிமுகவின் கோவிந்தசாமி எம்எல்ஏ-வாக உள்ளார். தேனி மாவட்டத்தில் இப்போது வரை டிடிவிக்கு செல்வாக்கு உள்ளது. அதேசமயம், பாப்பிரெட்டிபட்டியிலும் தனது அமமுக கரங்களை வலுப்பப்படுத்தியே வைத்திருக்கிறார் டிடிவி. தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமமுக அங்கு வலுவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

English summary
ammk chief ttv dhinakaran pappireddipatti - டிடிவி தினகரன்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X