சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ரேஸிலேயே கிடையாது... 2வது, 3வது இடம் யாருன்ணு பாருங்க.. டிடிவி பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: இந்த மக்களை தேர்தலில் திமுக ரேஸிலேயே இல்லை என்றும், 2வது இடம் மற்றும் 3வது இடம் யார் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்,

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைக்கே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்கின்றன.

இதேபோல் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனியாகவும், கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சி தனியாகவும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன.

டிடிவி தினகரன் பேட்டி

டிடிவி தினகரன் பேட்டி

இந்நிலையில் வெற்றிக்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சியினரும் வகுத்து வருகிறார்கள் டிடிவி தினகரன், இந்த தேர்தல் எப்படி இருக்கும், தங்கள் கட்சி எப்படி வெற்றிபெறும் என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியில் திமுக கூட்டணி வெற்றிக்கான ரேஸில் இல்லை என்றார்.

லோக்சபா தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.. இது மக்களின் கருத்து கணிப்பு!

யார் 2வது இடம்

யார் 2வது இடம்

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியதாவது: "இப்போது நான் சொன்னால் அதீத நம்பிக்கையில் பேசுகிறீர்கள் என்பீர்கள். ஆனால் உண்மையில் திமுக கூட்டணி ரேஸில் இல்லை. அவர்கள் தேர்தல் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தேர்தலில் இரண்டாவது இடம், மூன்றாவது இடம் யார் பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஆர்கே நகர் போலவே தேர்தல் முடிவுகள் இருக்கும்.

பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை.. அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா பரபரப்பு!பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை.. அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா பரபரப்பு!

அமமுகவை பற்றி திமுக

அமமுகவை பற்றி திமுக

நான் பர்சன்டேஜ் அடிப்படையில் தேர்தலை பார்ப்பது இல்லை. நாங்கள் வெற்றிபெறவிட்டால் திமுக வெல்லட்டும் என நினைப்பவன் கிடையாது. திமுகவும் தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்கும் கட்சி தான். ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக இரண்டாக பிரிந்ததால் வெற்றி பெறலாம் என திமுகவினர் நினைத்தார்கள்.ஆனால் டெபாசிட் கூட வாங்கவில்லை. எனவே இப்போதும் அப்படித்தான் இருக்கும். அமமுகவை பற்றி திமுகவினர் பேசாமல் இருப்பதற்கு, ஆளும் கட்சியாக அதிமுக இருப்பது தான் காரணம்.

ஒற்றை நபர்

ஒற்றை நபர்

என்னையே அமமுகவின் அடையாளம் என்று கூறுகிறீர்கள், ஆனால் ஏற்கனவே ஜெயலலிதா என்ற ஒன்றை நபரைநம்பித்தான் அதிமுக செயல்பட்டது. அதேபோல் முதல்முதலாக அதிமுக திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, எம்ஜிஆர் என்ற ஒற்றை நபரை நம்பித்தான் அதிமுக களம் கண்டது. எனவே எங்கள் இயக்கம் ஒற்றை நபர்களை நம்பி இயங்குவது புதிதல்ல" இவ்வாறு கூறினார்.

English summary
AMMK Deputy General Secretary dhinakaran says, DMK not in election Race, they get only 2nd 3rd place
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X