சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சி... ஒன்றுபட்டு தடுப்போம்- டிடிவி தினகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்|

    சென்னை: தென் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நின்று தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

    உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு... தேமுதிக அறிவிப்புஉள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு... தேமுதிக அறிவிப்பு

    உச்சநீதிமன்ற தீர்ப்பு

    உச்சநீதிமன்ற தீர்ப்பு

    தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அடுத்தக் கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சரியான முறையில் வாதங்களை எடுத்து வைப்பதற்கான பணிகளை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழகத்தில் 320 கி.மீ.

    தமிழகத்தில் 320 கி.மீ.

    கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென் பெண்ணையாறு அந்த மாநிலத்தில் வெறும் 120 கி.மீ.தூரமே பாய்வதாகவும், தமிழகத்தில் 320 கி.மீ.தூரத்திற்கு இந்த ஆறு பாய்வதாகவும் கூறியிருக்கிறார். கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாக தெரிவித்துள்ளார்.

    உலக விதி

    உலக விதி

    நதியின் கீழ்படுகை மாநிலங்களுக்கு அந்த நதிநீரில் உரிமை இருக்கிறது என உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டும் விதி, புறக்கணிக்கப்பட்டிருப்பது தமக்கு அதிர்ச்சி தருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் சரியான வாதங்களை எடுத்து வைக்கவில்லையோ என்ற கேள்வியும், ஆதங்கமும் எழுவதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றுபட வேண்டும்

    ஒன்றுபட வேண்டும்

    39 எம்.பிக்களை வைத்திருக்கும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தின் நலனை காவு கேட்கும் புதிய அணையை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    English summary
    ammk general secretary ttv dinakaran statement about thenpennai river judgement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X