சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்படி ஒரே மாதிரி நடந்தது இது.. அமமுக எப்படி சிக்கியிருக்கு பாருங்க.. தேர்தலில் இதுதான் பெரும் சவால்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே பெயர், ஒரே சின்னம் ... அமமுகவிற்கு புதிய தலைவலி

    சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, இந்த தேர்தல் பெரும் அக்னி பரிட்சையாக மாறிப்போயுள்ளது.

    அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து, குழுவாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். அமைப்பு என சொல்ல காரணம், இது கட்சியாக இன்னும் பதிவு செய்யப்படவில்லை. அதை அக்கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனே நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

    இப்படியான சூழலில், மினி சட்டசபை தேர்தல் எனப்படும், 18 தொகுதி இடைத் தேர்தல், பிறகு 40 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் என அதிலும் களமிறங்கிவிட்டது அமமுக.

    பரிசுப் பெட்டி சின்னம்

    பரிசுப் பெட்டி சின்னம்

    ஆனால் எதிர்பார்த்த மாதிரி, எல்லாம் ஈஸியாக போகவில்லை. ஆரம்பம் முதலே அமர்க்களம்தான். போராட்டமோ, போராட்டம்தான். ஆர்கேநகரில் வெற்றி பெற்ற சென்டிமென்ட்டாக குக்கர் சின்னம்தான் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு தோற்றது அமமுக. இருப்பினும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவு இவர்களுக்கு உதவியது. பொதுவான ஒரு சின்னத்தை இந்த குழுவிற்கு ஒதுக்குங்கள் என்பதுதான் அது.

    அதிமுகவில் மீண்டும் இணைவார்.. தினகரன் மறுத்தாலும் அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்அதிமுகவில் மீண்டும் இணைவார்.. தினகரன் மறுத்தாலும் அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

    சுயேச்சைகள் சவால்

    சுயேச்சைகள் சவால்

    இதன்படி பரிசுப் பெட்டி சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படியாக ஒரு சின்னத்தை வென்றபோதிலும், தேர்தலை சந்திப்பது என்னவோ அவ்வளவு எளிதாக தெரியவில்லை. இதற்கு காரணம், சுயேச்சைகள். அதிமுகவை கூட சமாளித்துவிடுவார்கள் போல ஆனால் சுயேச்சைகள்தான் அமமுகவிற்கு பெரும் சவாலாக வளர்ந்து நிற்கிறார்கள்.

    இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

    இங்கே பாருங்க கதையை

    இங்கே பாருங்க கதையை

    உதாரணத்திற்கு, இடைத் தேர்தல் நடைபெறும், பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக வேட்பாளர் பெயர் டிகே ராஜேந்திரன். இங்கே, போட்டியிடும் சுயேச்சை பெயரும் ராஜேந்திரன். இதில் என்ன பிரச்சினை. சின்ன சிக்கல்தானே என்கிறீர்களா. அந்த சுயேச்சை ராஜேந்திரனின் சின்னம் குக்கர். ஆம்.. இதுதான் விஷயம். அமமுக சின்னம்தான் குக்கர் என பெருவாரியான மக்கள் மனங்களில் பதிவாகியுள்ள நிலையில், ஒரே மாதிரி பெயரும், குக்கர் சின்னமும் அந்த கட்சி வெற்றிவாய்ப்பை எப்படி பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    குக்கர் சின்னம்

    குக்கர் சின்னம்

    அதேபோல அருரில் அமமுக வேட்பாளர் பெயர் ஆர் முருகன். அங்கும் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை பெயர் முருகன். திருவாரூரில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ். குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் பெயரும் காமராஜ். சாத்துரில் அமமுக வேட்பாளர் பெயர், எஸ்.சி.சுப்பிரமணியம். குக்கர் சின்னம் பெற்ற சுயேச்சை பெயர் சுப்பிரமணியம். இது எப்படி நடக்கிறது என்பதுதான் புதிர். ஆனால், இதுபோன்ற சுயேச்சைகளும், குக்கர் சின்னமும் தினகரன் அணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்பது மட்டும் உண்மை.

    English summary
    TTV Dinakaran's party AMMK is facing challenge by independent candidate and cooker symbol.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X