சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் 3வது பெரிய கட்சி அமமுக.. 4வது இடத்தில் நாம் தமிழர்.. கமலுக்கு 5வது இடம்!

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக முதலிடத்தையும், அதிமுக 2வது இடத்தையும் பிடித்த நிலையில் அமமுகவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. புதிதாக பிறந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 5வது இடத்தில் உள்ளது.

இந்த முறை நோட்டாவுக்கு கிடைத்த ஆதரவு என்பது 1.28 சதவீதமாக இருந்துள்ளது. திமுக கூட்டணிதான் முதலிடத்தைப் பிடித்து வலுவான இடத்தில் உள்ளது.

அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

திமுக 2.23 கோடி வாக்குகள்

திமுக 2.23 கோடி வாக்குகள்

திமுக கூட்டணிக்கு மொத்தமாக 2.23 கோடி வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்த வாக்கு சதவீதம் 52.64 சதவீதம் ஆகும். திமுகவின் தனிப்பட்ட வாக்கு சதவீதம் 32.76 சதவீதமாகும்.

அதிமுக 1.28 கோடி

அதிமுக 1.28 கோடி

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணிக்கு 1.28 கோடி வாக்குகளே கிடைத்துள்ளன. இதில் அதிமுகவின் வாக்கு வங்கி என்பது 18 சதவீதமாக சரிந்து போய் விட்டது. காங்கிரஸ் கட்சி 12 சதவீத வாக்குகளை பிடித்துள்ளது.

அமமுக 22.5 லட்சம்

அமமுக 22.5 லட்சம்

3வது இடத்தில் வந்துள்ளது அமமுக. பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தவறினாலும் கூட 3வது இடத்தைப் பிடித்து கொஞ்சம் மானத்தை தக்க வைத்துள்ளது இக்கட்சி. இக்கட்சி பெற்ற வாக்குகள் 22.25 லட்சம் ஆகும். வாக்கு சதவீதம் 5.25 சதவீதம் ஆகும்

நாம் தமிழர் 4

நாம் தமிழர் 4

நாம் தமிழர் கட்சி 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கட்சி மொத்தமாக 16.45 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் என்பது 3.88 சதவீதம் ஆகும். இது மிகப் பெரிய வளர்ச்சி.

6வது இடத்தில் கமல்

6வது இடத்தில் கமல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 15.75 லட்சம் வாக்குகளைப் பெற்று அதிர வைத்துள்ளது. முதல் தேர்தலிலேயே இந்த அளவுக்கு இக்கட்சிவாக்குகளைப் பெற்றது ஆச்சரியம்தான். வாக்கு சதவீதம் 3.72 சதவீதம் ஆகும்.

தேஞ்சு போச்சு தேமுதிக

தேஞ்சு போச்சு தேமுதிக

தேமுதிக தேய்ந்து கட்டெறும்பு ரேஞ்சுக்குப் போய் விட்டது. வெறும் 2.19 சதவீத வாக்குகளைத்தான் அது வாங்கியுள்ளது. விஜயகாந்த் உருவாக்கிய கட்சியை பிரேமலதாவும், தம்பி சுதீஷும் சேர்ந்து இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டது உண்மையிலேயே தேமுதிக தொண்டர்களுக்கு வருத்தமான செய்திதான்.

English summary
AMMK is emerging as the 3rd largest party in Tamil Nadu. Similarly, the Naam Tamiliar as the 4th party and the MNM as the 5th party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X