சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இசக்கி சுப்பையா அமமுகவை உதறி விட்டு.. அதிமுகவில் இணைய இதுதான் காரணமா..!

இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைய போவதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை: அ.தி.மு.கவில் இணைகிறார் இசக்கி சுப்பையா .! அமமுக தலைமை அலுவலகம் பறிபோகிறது!

    சென்னை: அமமுகவில் இருந்து யாராவது விலகினால், வழக்கமாக திமுகவுக்கு தானே போவார்கள்.. ஆனால் இசக்கி சுப்பையா ஏன் அதிமுகவுக்கு செல்ல வேண்டும்?

    இசக்கி சுப்பையா அமமுகவின் கட்சியின் மிக முக்கியமான நிர்வாகி. கிட்டத்தட்ட தங்க தமிழ்செல்வன் போல தினகரனிடம் நெருக்கமாக இருந்தவர்.

    இன்னும் ஓபனாக சொல்லப்போனால், முன்பு செந்தில் பாலாஜி என்ற "பசை பார்ட்டி" இருந்த இடத்தை பூர்த்தி செய்து வந்தவர் இசக்கி சுப்பையாதான்.

    நடு ராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. கதவை ஓங்கி ஓங்கி தட்டி.. சேலம் அருகே மக்கள் டென்ஷன்! நடு ராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. கதவை ஓங்கி ஓங்கி தட்டி.. சேலம் அருகே மக்கள் டென்ஷன்!

    வளமானவர்

    வளமானவர்

    இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு, இப்போதுள்ள அமமுக ஆபீஸ் இருப்பதே இசக்கியின் சொந்த இடத்தில்தான். அந்த அளவுக்கு வளமானவர்! இசக்கி சுப்பையா கேட்ட தொகுதி நெல்லை. ஆனால் தினகரன் தந்ததோ தென்சென்னையை. கட்டாயப்படுத்திதான் இசக்கியை இந்த தொகுதியில் போட்டியிட வைத்துள்ளார் தினகரன்.

    இசக்கி சுப்பையா

    இசக்கி சுப்பையா

    ஆனால் தென்சென்னையில் இசக்கி தோற்று போகவும்தான், தினகரனின் சில செயல்பாடுகளும், கருத்துகளும் பெரிய அளவில் இவருக்கு நம்பிக்கை தரவில்லை என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. சென்ற மாதம் குற்றாலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்தன. அதனால் எப்படியும் இசக்கி அதிமுகவுக்கு செல்லக்கூடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

    தாய்க்கழகம்

    தாய்க்கழகம்

    அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு செல்லும் சூழலில், இசக்கி மட்டும் ஏன் அதிமுகவுக்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படை சந்தேகமும் எழுகிறது. தாய்க்கழகம் என்று பொத்தாம் பொதுவாக எடுத்து கொண்டாலும், வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

    அனுசரணை

    அனுசரணை

    இசக்கிக்கு நிறைய இடங்களில் தாறுமாறான சொத்துக்கள், நிலபுலன்கள், உள்ளன. அடிப்படையில் இவர் ஒரு தொழில் அதிபர் என்பதால், இதெல்லாம் சாத்தியமாயிற்று. இப்போது இந்த சொத்துபத்துகளில் முறையான கணக்கு வழக்கு இருக்கிறதா, அல்லது வேறு ஏதேனும் சட்ட சிக்கல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி இருப்பின், அதிமுகவை அனுசரித்து போவதன் மூலமே அது சாத்தியமாகும் என்பதை உணர்ந்திருக்கலாம்.

    முக்கிய பொறுப்பு?

    முக்கிய பொறுப்பு?

    இதுதான் அதிமுகவில் இசக்கி சேர காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவேளை அதிமுகவுக்கு இசக்கி சென்றாலும், செந்தில்பாலாஜியை எப்படி திமுக அரவணைத்து, மரியாதை தந்து பெரிய பொறுப்பில் வைத்துள்ளதோ, அதுபோலவே இசக்கியையும் பயன்படுத்தி கொள்ளும் என்றே தெரிகிறது. ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த இசக்கியை, அதிமுக சும்மா விட்டு விடாது என்றே நம்பப்படுகிறது.

    English summary
    Sources say that, AMMK Isakki Subbaiah chance to join in AIADMK for his Business
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X