சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ஏமாற்றம்.. அமமுக, மநீம வாக்குகளை அள்ளிய அதிமுக.. 2 தொகுதியில் கலக்க இப்படி ஒரு காரணமா!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை வகிப்பதற்கு அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் ஒருவகையில் காரணம் என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Why Congress is loss Nanguneri byelection

    சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை வகிப்பதற்கு அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் ஒருவகையில் காரணம் என்கிறார்கள்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 29508வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 75888 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 462697 வாக்குகள் பெற்றுள்ளார்.

    நாங்குநேரியில் காங்கிரஸ் பின்னடைவு.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு உதவிய 6 காரணங்கள்!நாங்குநேரியில் காங்கிரஸ் பின்னடைவு.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு உதவிய 6 காரணங்கள்!

    முன்பு எப்படி

    முன்பு எப்படி

    கடந்த லோக்சபா தேர்தலிலும் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக சிறப்பாக வென்றது. 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வென்றது. 9 இடங்களில் வென்றதன் மூலம் அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    அமமுக எப்படி

    அமமுக எப்படி

    அந்த தேர்தலில் அதிமுக 13 இடங்களில் தோல்வி அடைய காரணமாக அமமுக பார்க்கப்பட்டது. அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் அமமுக பிரித்தது. இதனால் அதிமுகவின் வாக்குகள் பிரிந்து திமுக எளிதாக வென்றது.

    திமுக வெற்றி

    திமுக வெற்றி

    திமுக அந்த தேர்தலில் வென்ற இடங்களில் பல தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றது. அமுமக அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் பிரித்ததுதான் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. வேலூர் இடைத்தேர்தலில் இதேதான் நடந்தது.

    வாக்கு வங்கி

    வாக்கு வங்கி

    வேலூர் லோக்சபா இடைத்தேர்தலில் திமுக வென்றது. ஆனால் கடைசி வரை நெக் டு நெக் போட்டி நடைபெற்று, கடைசி நொடியில்தான் திமுக வென்றது. அப்போது அமமுக போட்டியிடவில்லை. அதனால் அமமுகவின் வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு சென்றது.

    இரண்டு தொகுதி தேர்தல்

    இரண்டு தொகுதி தேர்தல்

    இந்த நிலையில்தான் தற்போது நடந்துள்ள இடைத்தேர்தலிலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதியிலும் அதிமுக வெல்லும் நிலையில் இருக்கிறது. அமமுகவின் வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு சென்றதுதான் அதிமுகவின் இந்த விஸ்வரூபத்துக்கு காரணம் என்கிறார்கள்.

     இரண்டு கட்சிகள்

    இரண்டு கட்சிகள்

    கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் முறையே 3% மற்றும் 2% வாக்குகளை பெற்றது. தற்போது அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு வந்துள்ளது. இதுதான் இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றிபெற காரணம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    AMMK may be a reason for AIADMK' success in Nanguneri, Vikravandi By Election in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X