சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாம் எதுவும் செய்யவேண்டாம்.. அதிமுகவை அமமுகவே காலி செய்துவிடும்.. கூலாக பிளான் போடும் ஸ்டாலின்!

லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அமமுக மிக அதிக அளவில் பிரிக்கும் என்பதால் திமுகவின் வெற்றி எளிதாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அமமுக மிக அதிக அளவில் பிரிக்கும் என்பதால் திமுகவின் வெற்றி எளிதாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்.

லோக்சபா தேர்தல் காரணமாக தமிழகம் மிகவும் பரபரப்பாகி இருக்கிறது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது.

திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் அமமுகவின் வேட்பாளர் பட்டியலை பார்த்து திமுக கட்சி மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறது.

தடதடக்கும் தஞ்சை.. தரமான வெற்றி யாருக்கு?

என்ன பட்டியல்

என்ன பட்டியல்

லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத்தின் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியலில் பல முன்னாள் அதிமுக உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமபலம்

சமபலம்

இவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட அதிமுக வேட்பாளர்களை போலவே சரியான பலம் பொருந்திய வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அதிமுகவில் இருந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு இப்போதும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு நிறைய இருக்கிறது. இதுதான் தேர்தல் நேரத்தில் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நீங்க வருஷத்திற்கு ரூ.6000, நாங்க மாதத்துக்கு ரூ.6000! பாஜகவை வீழ்த்த காங். எடுத்த பிரம்மாஸ்திரம் நீங்க வருஷத்திற்கு ரூ.6000, நாங்க மாதத்துக்கு ரூ.6000! பாஜகவை வீழ்த்த காங். எடுத்த பிரம்மாஸ்திரம்

என்ன உதாரணம்

என்ன உதாரணம்

உதாரணமாக அமமுக சார்பாக தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டது அத்தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் நெல்லையில் அதிமுக மனோஜ் பாண்டியனை எதிர்த்து அமமுக மைக்கேல் ராயப்பன் நிற்கிறார். தருமபுரியில் அன்புமணிக்கு எதிராக களமிறங்கும் பழனியப்பன் என அனைத்து தொகுதியிலும் அமமுக வேட்பாளர்கள் எல்லோருமே மிக மிக வலுவான வேட்பாளர்கள்தான்.

ஸ்டாலின் மகிழ்ச்சி

ஸ்டாலின் மகிழ்ச்சி

இதுதான் தற்போது ஸ்டாலினுக்கும் சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. திமுக கூட்டணியின் வாக்கு எப்போதும் போல நமக்கு வரும், அதிமுக வாக்குதான் அதிமுக - அமமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு பிரிய போகிறது. இதனால் அதிமுக பல இடங்களில் மூன்றாம் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது, என்று அவருக்கு ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது.

சரியாக நடக்கும்

சரியாக நடக்கும்

இதனால்தான் தேர்தல் பிரச்சாரங்களில் ஸ்டாலின் அமமுக மற்றும் மநீம ஆகியோரை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை. நேரடியாக அதிமுகவை மட்டும் டார்கெட் செய்து பேசி வருகிறார். அமமுகவிற்கு செல்லும் வாக்குகள் எல்லாம் எதோ ஒரு வகையில் திமுகவிற்கு உதவும் என்று ஸ்டாலின் நம்புகிறார். அதனால் அமமுக முடிந்த அளவு அதிமுகவை காலி செய்யட்டும் நாம் கூலாக இருப்போம் என்று ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

English summary
AMMK may help DMK in the battle against AIADMK: Here M K Stalin's plan is explained.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X