சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் சறுக்கல் ஏற்பட்டது எப்படி என்று விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

38 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமமுக டெபாசிட் இழந்துள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 38 தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்டது.

AMMK Meeting on june1, TTV Dinakaran Statement

தென் சென்னை தொகுதியில் மட்டும் அக்கட்சியின் ஆதரவுடன் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலையில் வரவில்லை. குறிப்பாக அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்பட்ட தேனி, ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்கு கிடைக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில், மூன்றாவது கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வந்துள்ளது. சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மநீம கட்சி கடும் போட்டியாக இருந்தது.

சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை

இந்தநிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், மக்களவை, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அமமுக அழைப்பு விடுத்துள்ளது.

English summary
Election Defeat: AMMK Meeting on june1, TTV Dinakaran Statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X