சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன் என்னை அசிங்கப்படுத்தணும்? இது புறக்கணிப்பா.. பழி வாங்கலாமா? அமமுக புகழேந்தி வேதனை

ஐடி விங் வீடியோ வெளியிட்டது ஏன் என்று புகழேந்தி வேதனை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரன் குறித்து ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ

    சென்னை: "நாலு பேர் ஒரு ரூமில் பேசிய விஷயத்தை ஊரெல்லாம் பரப்ப என்ன காரணம்? ஐடி விங் ஏன் என்னை அசிங்கப்படுத்தணும்?" என்று அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி வேதனை தெரிவித்துள்ளார்

    கடந்த சில வாரங்களாகவே அமமுக மெல்ல கரைந்து வருகிறது. மற்றொரு பக்கம் கட்சியை பலப்படுத்த தினகரன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளையும் நியமித்தும், நீக்கியும் வருகிறார். அதன்படி கோவையிலும் முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கினார். ஏற்கனவே இப்படி ஒரு நபரை நியமனம் செய்ததால்தான், புதுவை நிர்வாகிகள் 40 பேரும் ராஜினாமா கடிதம் அனுப்பி கூண்டோடு ராஜினாமா செய்தார்கள்.

    'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ

    கோவை

    கோவை

    இதையடுத்து கோவையிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சிக்காக ரொம்ப காலமாக உழைத்துவிட்டு திடீரென கட்சியை விட்டு நீக்கியது ஏன் என்பதுதான் அவர்களது கேள்வியாக இருந்திருக்கிறது. இந்த சமயத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கடந்த 6ம் தேதி நேரில் சந்தித்து காரணம், புகார் குறித்து கேட்டறிந்தார். அப்போது இவர்கள் பேசிய பேச்சு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

    அம்மா மரணம்

    அம்மா மரணம்

    வீடியோவில் "நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூடஇவர் இல்லை" என்று பேசப்பட்டு உள்ளது.

    வேதனை

    வேதனை

    இந்த வீடியோ வெளியானது குறித்து புகழேந்தி சொல்லும்போது, "மன வேதனை, அதிருப்தியில் உள்ளவர்களை சந்தித்து பேசியதில் என்ன தவறு? இவர்கள் எல்லாம் கட்சிக்காக உழைத்தவர்கள் மட்டுமில்லை, கட்சிக்காக சிறை சென்றவர்களும்கூட.

     குமுறல்

    குமுறல்

    என்னிடம் பல குமுறல்களை கொட்டினார்கள். அதற்கு நான் ஆறுதல் சொன்னேன். நமக்காக சசிகலா இருக்கிறார். வேறு எங்கேயும் போக தேவையில்லை என்றேன். ஆனால் இந்த வீடியோவை அமமுக ஐடி.விங் எடுத்து, இணையத்தில் போட்டுவிட்டது. இது நியாயமா?

    ஐடி விங்

    ஐடி விங்

    4 பேர் ஒரு ரூமில் பேசிய விஷயத்தை ஊரெல்லாம் பரப்ப என்ன காரணம்? அப்படின்னா எங்களுக்கு சுதந்திரமே இல்லையா? பேசவே கூடாதா? ஐடிவிங் ஏன் எங்களை இப்படி அசிங்கப்படுத்தணும்? அப்படித்தான் வீடியோ வெளியானதே.. கட்சி என்னை கூப்பிட்டு ஏன் பேசவே இல்லை. அந்த வீடியோவை முழுசா கேட்டீங்கன்னா தெரியும்.. முழு விவரம் புரியும்.. நான் வேற கட்சிக்கு போக போறேன்னு அதுல சொல்லவே இல்லையே.

    மாநில பொறுப்பு

    மாநில பொறுப்பு

    என்னை ஒரு தனியார் இணையதளத்தில் கட்சியில் உங்களுக்கு புதிய பொறுப்பு எதுவும் தரலையான்னு கேட்டாங்க. ஆமாம்.. மாநில அளவிலான பொறுப்பு தரலேன்னு சொன்னேன். இது சொல்ல கூடாதா? நான் சசிகலாவிற்கு வேண்டியவன் என்பதால் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறேனா, பழிவாங்கப் படுகின்றேனா என்றே தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    AMMK Senior Leader Pugazhendhi explains about the Video and condemns Party IT Wing
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X