• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு- கோவில்பட்டியில் தினகரன் போட்டி

|

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 50 பேர் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, மநீம கட்சிகளைப் போல அமமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அ.ம.மு.க ஏற்கனவே 15 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டிருந்தது.

AMMK releases 2nd list of candidates for Assembly Elections

இந்த நிலையில் இன்று 50 பேர் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் பதவி இழந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவில் இருந்து இன்று நீக்கப்பட்ட ராஜவர்மனுக்கு சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்- 2வது பட்டியல்:

 • கோவில்பட்டி- டிடிவி தினகரன்
 • குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன்
 • ராமநாதபுரம் - மண்டபம் ஜி. முனியசாமி
 • திருநெல்வேலி- பி. பாலகிருஷ்ணன் என்ற ஏ.பி. பால்கண்ணன்
 • திருப்போரூர்- எம். கோதண்டபாணி
 • திருப்பரங்குன்றம்- டேவிட் அண்ணாதுரை
 • மானாமதுரை- மாரியப்பன் கென்னடி
 • தாம்பரம்- ம. கரிகாலன்
 • திருவையாறு- வேலு. கார்த்திகேயன்
 • தியாகராய நகர்- ஆர். பரணீஸ்வரன்
 • திருப்பூர் தெற்கு- முன்னாள் மேயர் விசாலாட்சி
 • விழுப்புரம்- ஆர். பாலசுந்தரம்
 • சாத்தூர்- எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்
 • பொன்னேரி- பொன். ராஜா
 • பூந்தமல்லி- டி.ஏ. ஏழுமலை
 • அம்பத்தூர்- எஸ். வேதாச்சலம்
 • சேலம் தெற்கு- Se. வெங்கடாஜலம்
 • கிணத்துக்கடவு- ரோகினி கிருஷ்ணகுமார்
 • மண்ணச்சநல்லூர்- தொட்டியம் எம். ராஜசேகரன்
 • முதுகுளத்தூர்- எம். முருகன்
 • மதுரவாய;- லக்கி முருகன்
 • மாதவரம்- டி. தக்‌ஷிணாமூர்த்தி
 • பெரம்பூர்- லட்சுமி நாராயணன்
 • சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- எல். ராஜேந்திரன்
 • அணைக்கட்டு- வி.டி. சத்யா என்ற சதீஷ்குமார்
 • திருப்பத்தூர் - ஏ. ஞானசேகர்
 • பர்கூர்- எஸ். கணேசகுமார்
 • ஓசூர்- மாரே கவுடு
 • செய்யாறு- மா.கி. வரதராஜன்
 • செஞ்சி- ஏ. கெளதம்
 • ஓமலூர்- கே.கே. மாதேஸ்வரன்
 • எடப்பாட்டி- பூக்கடை சேகர்
 • பரமத்தி வேலூர்- பி.பி. சாமிநாதன்
 • திருச்செங்கோடு- ஆர். ஹேமலதா
 • அந்தியூர்- எஸ்.ஆர். செல்வம்
 • குன்னூர்- கலைச்செல்வன்
 • பல்லடம்- ஆர். ஜோதிமணி
 • கோவை வடக்கு- என்.ஆர். அப்பாதுரை
 • திண்டுக்கல் - ராமுத்தேவர்
 • மன்னார்குடி- எஸ். காமராஜ்
 • ஒரத்தநாடு- மா. சேகர்
 • காரைக்குடி- தேர்போகி வி. பாண்டி
 • ஆண்டிபட்டி- ஆர். ஜெயக்குமார்
 • போடிநாயக்கனூர்- எம். முத்துச்சாமி
 • ஸ்ரீவில்லிபுத்தூர்- எஸ். சங்கீதப்ரியா சந்தோஷ்குமார்
 • சிவகாசி- கு. சாமிக்காளை
 • திருவாடானை- வி.டி.என். ஆனந்த்
 • விளாத்திகுளம்- கே. சீனிச்செல்வி
 • கன்னியாகுமரி- செந்தில் முருகன்

English summary
AMMK today released the Second list of candidates for Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X