சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரவே இல்லை.. செலவு மட்டும் எக்கசக்கம்.. அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு ஜம்ப்பாகும் முக்கிய தலைகள்?

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுகவின் தங்கதமிழ்ச் செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் அதிமுகவில் இணையப்போகிறார்களா?

    சென்னை: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற காமெடிக்கு ஏற்ப அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் முக்கிய தலைகள் அதிமுகவுக்கு ஜம்ப் ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஜெயலலிதாவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் இன்று எங்கள் பக்கம்தான் உள்ளனர் என ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பும், இல்லை இல்லை எங்கள் பக்கம் தான் உள்ளனர் என டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவை அங்கீகரித்ததன் மூலம் தொண்டர்களின் மனநிலை குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இதை தினகரன் உணர்கிறாரோ இல்லையோ அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் உணர்ந்துவிட்டனர்.

    அரவக்குறிச்சி எம்எல்ஏ

    அரவக்குறிச்சி எம்எல்ஏ

    டிடிவி தினகரனை நம்பி பதவி, பணம், புகழ் எல்லாத்தையும் இழந்துவிட்டதாகவே ஆதரவாளர்கள் கருதுகின்றனர். துன்பத்திலும் ஒரு இன்பம் என்பதை போல் இதையெல்லாம் உணர்ந்த செந்தில் பாலாஜி இருக்கும் கொஞ்ச நஞ்ச பணமும் விரயம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே திமுகவில் இணைந்து தற்போது அரவக்குறிச்சி எம்எல்ஏ ஆகிவிட்டார்.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    ஆனால் பிழைக்கத் தெரியாத நாம்தான் செந்தில்பாலாஜி ஒரு பச்சோந்தி, துரோகி என தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை தாமதமாக உணர்ந்த போதிலும் இன்னும் உள்ள இரண்டரை ஆண்டு காலத்தில் ஆளுங்கட்சியுடன் இணைந்து நாலு காசு பார்த்துவிட்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என ஆதரவாளர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

    தேமுதிக

    தேமுதிக

    அந்த வகையில் செந்தில்பாலாஜிக்கு பிறகு தங்கத்தமிழ் செல்வனின் ரைட் ஹேண்ட் எனப்படும் அருண்குமார் அதிமுகவில் இணையவுள்ளார். தேமுதிகவில் மாவட்டச் செயலாளராக இருந்து விஜயகாந்திற்கு பல லட்சங்களை வாரி இறைத்து தேனி மாவட்டத்தில் தேமுதிகவை வளர்த்தார்.

    புகழேந்தி

    புகழேந்தி

    இதையடுத்து தங்கதமிழ்ச் செல்வனுக்கும் ஆண்டிப்பட்டி அமமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கும் வாரி இறைத்து அது வீணாகியதால் மனமுடைந்து இனியும் இங்கிருந்தால் இருப்பதும் போய்விடும் என்ற நிலையில் அதிமுகவில் இணையவுள்ளார். அவர் மட்டுமல்லாமல் தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்டோரையும் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

    புகழேந்தி

    புகழேந்தி

    இதையடுத்து தங்கதமிழ்ச் செல்வனுக்கும் ஆண்டிப்பட்டி அமமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கும் வாரி இறைத்து அது வீணாகியதால் மனமுடைந்து இனியும் இங்கிருந்தால் இருப்பதும் போய்விடும் என்ற நிலையில் அதிமுகவில் இணையவுள்ளார். அவர் மட்டுமல்லாமல் தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்டோரையும் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

    அமமுக கூடாரம் காலி

    அமமுக கூடாரம் காலி

    இதையடுத்து தேனி மாவட்ட அதிமுக புள்ளிகள் மூலம் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்க திட்டமிட்டுள்ளார். நேரம் கிடைத்தால் இவர்கள் அனைவரும் அதிமுகவில் இணையவுள்ளனர் என கூறப்படுகிறது. இதற்காக அதிமுகவில் பேரங்களும் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் ஓட்டுக்களை பிரித்ததன் மூலம் 35 ஆண்டுகளுக்கு பிறகு, அத்தொகுதியில் அதிமுகவை தோற்கடித்த பெருமை அருண்குமாருக்கு உண்டு என்பதால் அவருக்கு மவுசு அதிகம் என்கின்றனர். எனவே விரைவில் தேனி மாவட்ட அமமுக கூடாரம் காலியாகும் என தெரிகிறது.

    English summary
    TTV Dinakaran's AMMK's top leaders are going to join in ADMK, sources says.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X