சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என சொல்கிறார்களே- இதை மறக்க முடியுமா? அமமுக அதகள குறும்படம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவே முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் தினகரனின் அமமுகவினரோ, சசிகலா மற்றும் தினகரன் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுகளின் வீடியோவை குறும்படமாக உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த சிறை தண்டனை முடிந்து வரும் 27-ந் தேதி சசிகலா விடுதலையாகிறார்.

சசிகலா- அதிமுக

சசிகலா- அதிமுக

சசிகலா, சிறைக்கு போகும்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கால் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக சசிகலா முன்னிலையில் கூவத்தூர் சொகுசு விடுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுகவுக்கு டெல்லி நெருக்கடி

அதிமுகவுக்கு டெல்லி நெருக்கடி

சசிகலா சிறைக்குப் போன பின்னர் அவரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கமாட்டோம் என அதிமுக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என டெல்லி நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டடது.

சசிகலா- எடப்பாடி பழனிசாமி

சசிகலா- எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார். இதற்கு பதில் தரும் வகையில் அதிமுகவை மீட்போம் என்ற ஹேஷ்டேக்குடன் அமமுகவினர் ஒரு குறும்பட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அமமுக குறும்படம்

அமமுக குறும்படம்

அதில் சசிகலா, தினகரனை புகழ்ந்து முதல்வர் எடப்பாடி பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆர்கே நகர் தொகுதியில் தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த போது பேசிய வீடியோ பதிவுகள், கூவத்தூரில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டபோது ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழும் காட்சிகள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

English summary
AMMK's video went viral on Sasikala and ADMK leaders speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X