சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 தொகுதி இடைத்தேர்தல்.. 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்.. அமமுக லிஸ்ட் இதோ!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. அதே நாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இதனால் தமிழகம் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

பாதி பேர் பெயரை காணோம்.. வாய்ப்பு பெறாத முக்கிய தலைகள்.. டிடிவியின் அசத்தல் திட்டம் என்ன?பாதி பேர் பெயரை காணோம்.. வாய்ப்பு பெறாத முக்கிய தலைகள்.. டிடிவியின் அசத்தல் திட்டம் என்ன?

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

மொத்தம் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்கு காரணமாக தேர்தல் நடக்கவில்லை.

என்ன பட்டியல்

என்ன பட்டியல்

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 9 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களே அ.ம.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர் .

இதுதான் முழுபட்டியல்

9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.

பூவிருந்தவல்லி (தனி) - ஏழுமலை
பெரம்பூர் - பி.வெற்றிவேல்
திருப்போரூர்- கோதண்டபாணி
குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன்
ஆம்பூர் - பாலசுப்பிரமணி
அரூர் - முருகேசன்
மானாமதுரை (தனி) - மாரியப்பன் கென்னடி
சாத்தூர்- எஸ்.ஜி சுப்பிரமணியன்
பரமக்குடி (தனி)- முத்தையா

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

18 தொகுதிகளில் ஓசூர், திருவாரூர் தவிர்த்து 16 தொகுதிகள் எம்எல்ஏ பதவியை நீக்கம் காரணமாக காலியான தொகுதிகள் ஆகும். ஆனால் இதில் 9 இடங்களுக்கு மட்டுமே தற்போது டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மீதம் உள்ளவர்களின் பட்டியல் இனிமேல்தான் வெளியிடப்படும்.

English summary
AMMK Dept.Gen.Sec TTV Dinakaran releases the party's candidates' list for TN By-Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X