சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் தெரியும்... டிடிவி தினகரன் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் ரீதியாக வீழ்த்த நினைக்கும் வியூகங்களை தவிடுபொடியாக்கி, மீண்டும் எழுச்சியோடு செயல்படுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக கட்சியின் பொருளாளர் ரங்கசாமியின் மகன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், நாளை நமதே என்ற எண்ணத்தோடு, தமிழகத்தின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

AMMK voting percentage Come out In local elections Says TTV Dinakaran

முன்னதாக, நடந்து முடிந்த தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் அமமுகவுக்கு ஒரு வாக்குகூட பதிவாகாதது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்படும் என்றார். அமமுக பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சி சரியாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

வருகிற ஜூன் 1-ந்தேதி கூட மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், வேட்பாளர்கள் ஆகியோருடன் முதல் கட்டமாக ஆலோசனை நடக்கிறது. அதன் பிறகு அடுத்த கட்ட நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக தயாராவோம என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

 6 கவுன்சிலர்களை துப்பாக்கி முனையில் கடத்திய பாஜக.. திரிணாமுல் காங்கிரஸ் பகீர் ட்வீட் 6 கவுன்சிலர்களை துப்பாக்கி முனையில் கடத்திய பாஜக.. திரிணாமுல் காங்கிரஸ் பகீர் ட்வீட்

நாடாளுமன்றத் தேர்தலின் போது நான் அளித்த வாக்குகள் என்னவானது என்று பல கிராமங்களில், நகரங்களில் மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் வாக்களித்த பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. நாங்கள் அ.ம.மு.க.விற்குதான் வாக்களித்தோம் என்கிறார்கள்.

ஆனால் பதிவான சதவீதம் எவ்வளவு என்று தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் உள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது உங்களுக்கு தெரியப்போகிறது என்றும் கூறினார்.

30 தொகுதியில் 588 பூத்களில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது. முகவர்களின் வாக்குகள் கூடவா எங்களுக்கு விழவில்லை என டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பினார்.

English summary
TTV Dinakaran Said that AMMK voting percentage Come out In local elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X