சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் கட்சியாக 'அமமுக'.. சசிகலாவுக்கு பதில் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் கட்சியாக மாறும் அமமுக: பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்- வீடியோ

    சென்னை: டிடிவி தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தினகரன் திட்டமிட்டுள்ளார். இதனிடையே சசிகலாவுக்கு பதில் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற டிடிவி தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவாக மாறினார்.

    அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை டிடிவி தினகரன் மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்தார். ஆனால் இந்த இயக்கம் அரசியல் கட்சி இல்லை என்றும் அதிமுகவின் மாற்று அணி தான் என்றும் அப்போது கூறினார்.

    மணமாலையும் மஞ்சளும் சூடிய கையோடு, வாக்களித்த தம்பதி.. வாழ்த்திய வாக்காளர்கள்மணமாலையும் மஞ்சளும் சூடிய கையோடு, வாக்களித்த தம்பதி.. வாழ்த்திய வாக்காளர்கள்

    சின்னம் கேட்டு வழக்கு

    சின்னம் கேட்டு வழக்கு

    தொண்டர்களின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாக கூறி அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இரட்டை இலை, அதிமுக கட்சி இரண்டுமே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கே என நீதிமனறத்தில் தீர்ப்பு வந்தது.

    கைவிரிப்பு

    கைவிரிப்பு

    இதற்கிடையே மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கைவிரித்தது. இதனால் நீதிமன்றத்தில் போராடிய தினகரனிடம், கட்சியை பதிவு செய்தால் தான் ஒரே சின்னம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    சுயேட்சைகள்

    சுயேட்சைகள்

    எனினும் பரிசுப்பெட்டி சின்னம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தினகரன் அணிக்கு கிடைத்தது. ஆனால் ஒரே சின்னம் வழங்கப்பட்டாலும், இவர்கள் அனைவரும் சுயேட்சைகளாகவே கருதப்படுவர் என உச்சநீதிமன்றம் அன்றைக்கு தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தது.

    தேர்தல் ஆணையத்தில்

    தேர்தல் ஆணையத்தில்

    இதன் காரணமாக தேர்தல் முடிந்த கையோடு தனது அமமுக இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற தினகரன் முடிவு எடுத்துள்ளார். இதன்படி அடுத்த ஒரு வாரத்தில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவுசெய்துள்ளார்.

    கட்சிக்கு சின்னம்

    கட்சிக்கு சின்னம்

    தேர்தல் ஆணையத்தில் அமமுகவை பதிவு செய்தால், சுயேட்சை வேட்பாளர்களாக இனி போட்டியிட வேண்டியது இல்லை. ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்பதால் தினகரன் இந்த முடிவினை எடுத்துள்ளார். இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சசிகலாவை தினகரன் பொதுச்செயலாளர் என அறிவித்து இருந்த நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    ammk will become political party by ttv Dhinakaran, he will register his party in election commission
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X