சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு?

சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டி இல்லை என தினகரன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் | Nanguneri By Election

    சென்னை: திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இடைத்தேர்தலுக்கு மும்முரம் காட்ட தொடங்கி உள்ள நிலையில், சின்னம் காரணத்தை சொல்லி.. அமமுக அப்படியே ஜகா வாங்கி உள்ளது. அதேபோல, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் என்னவென்று தெரியவில்லை.

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தேர்தல் திமுக, அதிமுகவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை கடந்த முறையே எம்பி தேர்தலில்தான் கவனம் செலுத்தியது.

    அதனால்தான் சட்டமன்ற தொகுதிகளை கோட்டை விட்டு.. ஆட்சி மாற்றம் என்ற விஷயத்தையை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. அதனால் நாளைக்கே விருப்பமனு என்று சொல்லி உள்ளது.

    வந்தது இடைத் தேர்தல்.. நாளைக்கே விருப்ப மனு.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக, திமுகவந்தது இடைத் தேர்தல்.. நாளைக்கே விருப்ப மனு.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக, திமுக

    கட்டாயம்

    கட்டாயம்

    அதிமுகவை பொறுத்தவரை, கட்சியையும், ஆட்சியையும் பலமாக்கி கொள்ள இந்த இடைதேர்தலையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் இந்த கட்சியும் நாளைக்கே விருப்பமனு என்று அறிவித்துள்ளது. ஆனால் டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அறிவித்துவிட்டார்.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    கட்சியை முறைப்படி ரிஜிஸ்தர் செய்து, மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை நியமனம் செய்து புதுப்பித்து வரும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு கூட, நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் கட்சியை பதிவு செய்து, சின்னமும் கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

    சின்னம்

    சின்னம்

    இப்படி சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் தினகரன் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் சின்னம் விவகாரமே எழுந்துள்ளது. "சின்னம் கிடைக்காமல் போட்டியிட மாட்டோம். தேர்தலுக்குள் சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே போட்டியிட வாய்ப்பில்லை" என்று தேர்தல் தேதி அறிவித்ததும் முதல் ஆளாக வந்து இதை தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர்

    நாம் தமிழர்

    இதனிடையே மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் என்ன செய்ய போகின்றன என்று தெரியவில்லை. வேலூர் தேர்தலிலேயே 2 ஜாம்பவான்களுக்கு நடுவில் மோதிய கட்சி நாம் தமிழர். அதனால் இந்த இடைத்தேர்தலை எளிதாக விட்டுவிடுமா என்று தெரியவில்லை. அதேபோல, வேலூர் தொகுதியிலேயே மய்யம் போட்டியிடாத நிலையில் இந்த இடைத்தேர்தலையாவது கமல் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    ஆக மொத்தம், பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினாலும், ஒத்தைக்கு ஒத்தையாக இந்த முறையும் களத்தில் இறங்கியுள்ளது வழக்கம்போல அதிமுகவும், திமுகவும்தான்!

    English summary
    TTV Dinakaran said that, AMMK Wont contest any any election till get our Party Symbol
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X