சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த வருடத்தில் நேற்றுதான் மிக மோசம்.. இன்று இன்னும் மோசமாகும்.. சென்னைக்கு வெதர்மேன் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த வருடத்தில் மிக அதிகமான வெப்பநிலை நேற்றுதான் சென்னையில் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.

Recommended Video

    'Heat Will Increase' - Tamilnadu Weatherman and IMD Weather Update

    ஆம்பன் புயல் தற்போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை தாக்க சென்று கொண்டு இருக்கிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே ஆம்பன் புயல் கரையை கடக்கிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் இருந்து இந்த புயல் 520 கிமீ தூரத்தில் இருக்கிறது.

    இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால் இதனால் ஏற்பட்ட வெப்ப காற்று காரணமாக தமிழகத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

    ஆம்பன் தொடக்கம்தான்.. இன்னும் பல சூப்பர் புயல் சீக்கிரம் வரும்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.. பின்னணி ஆம்பன் தொடக்கம்தான்.. இன்னும் பல சூப்பர் புயல் சீக்கிரம் வரும்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.. பின்னணி

    நேற்று சென்னை வெப்பநிலை

    நேற்று சென்னை வெப்பநிலை

    இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில் இந்த வருடத்தில் மிக அதிகமான வெப்பநிலை நேற்றுதான் சென்னையில் ஏற்பட்டுள்ளது. கடலோர நகரங்கள் பலவற்றிலும் இதேபோல் நேற்று அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளது. நாம் இன்னும் 3-4 நாட்களுக்கு இந்த வெப்பநிலையை சகித்துக் கொள்ள வேண்டும். இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    தமிழகம் பக்கம் திரும்பும்

    தமிழகம் பக்கம் திரும்பும்

    ராயலசீமா பகுதியில் இருந்து அதிக வெப்பம் தமிழகம் பக்கம் இன்று திரும்பும். முக்கியமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு பக்கம் அதிகமாக இந்த வெப்பம் வரும். இதனால் வெப்பநிலை அதிகரிக்கும். இன்று இன்னும் வெப்பநிலை அதிகமாக இருக்கும். நேற்றை விட இன்று அதிக வெப்பநிலை இருக்கும். வெப்பநிலை 41 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருந்து 42/43 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இரவு நேரம்

    இரவிலும் கூட வெப்ப காற்றை நாம் உணர வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் வடமேற்கு திசை மற்றும் மேற்கு திசையில் ஜன்னல்கள் இருந்தால் அதை மூடி வையுங்கள். இதன் மூலமாக வீட்டிற்குள் வெப்ப காற்று வருவதை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். தமிழகத்தில் முக்கியமாக சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஃபனி புயல்

    ஃபனி புயல்

    இதேபோல் இதற்கு முன் ஃபனி புயல் காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்தது. அப்போது ஃபனி புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபனி புயல் ஒடிஸாவை நோக்கி திரும்பியது. இதனால் ஏற்பட்ட வெப்ப மாறுபாடு காரணமாக தமிழகத்தில், சென்னையில் வெப்பநிலை அதிகம் ஆனது. தற்போது அதேபோல் இந்த ஆம்பன் புயல் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

    English summary
    Amphan Storm: Chennai will see more heat today than yesterday says Tamilnadu Weatherman in his post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X