சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று பகல் முதல் மாலை வரை கரையை கடந்தது. அப்போது பயங்கரமான பேய் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

Recommended Video

    Cyclone Amphan Live : Landfall begins in Bengal, likely to go on for 4 hrs

    ஆம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. நான்கு நாட்களுக்கு முன் தெற்கு வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் வலிமையடைந்து சூப்பர் புயலானது.

    வங்ககடலில் உருவான இந்த புயல் தமிழகத்தை தாக்காமல் விலகி சென்றுள்ளது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் இன்று கரையை கடந்தது.

    ஆம்பன் புயல்.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியது.. அதி தீவிர மழை! ஆம்பன் புயல்.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியது.. அதி தீவிர மழை!

    கொட்டிய மழை

    கொட்டிய மழை

    இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த புயல் முழுமையாக கரையை கடக்க நான்கு மணி நேரம் எடுத்துக் கொண்டது. இந்த புயல் வங்க கடலுக்கு மேலே இருந்த போது 220 கிமீ வேகத்தில் சென்றது. கரையை கடக்கும் போது இதன் வேகம் குறைந்தது. ஆம்பன் புயல் 160 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. புயலின் கண் பகுதி மேற்கு வங்கத்தில் இருந்தது.

    கண் பகுதி எப்படி

    கண் பகுதி எப்படி

    பொதுவாக புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடக்கும் போது அதன் தீவிரம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் காற்று வேகமாக வீசும். இதனால் சேதங்கள் அதிகம் இருக்கும். ஆம்பன் புயலின் கண் பகுதியை கரையை கடந்த போது 180 கிமீ வேகத்தை அடைந்தது. முன்னதாக 160 கிமீ வேகத்தில் புயல் அடித்தது. மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் கரையை கடந்த நிலையில், ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தில் கன மழை கொட்டியது.

    அதிக சேதம்

    அதிக சேதம்

    இதனால் ஒடிசாவில் மிக மோசமாக சேதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கான்ஸ், தெற்கு 24 பர்கான்ஸ், சுந்தர்பன் ஆகிய பகுதிகளில் இந்த புயலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த புயல் 20 வருடங்களில் இல்லாத சேதத்தை உருவாக்கியது. முதலில் சூப்பர் புயலாக இருந்த இந்த புயல் நேற்று அதி தீவிர புயலாக வலிமை இழந்தது.

    அதிக மழை பெய்யும்

    அதிக மழை பெய்யும்

    இந்த புயல் முழுமையாக கரையை கடந்த பின்தான் அதிகமாக மழை கொட்டியது. கரையை கடக்க ஆம்பன் புயல் 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது. அதன்பின் இரவு முழுக்க தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே இதனால் மக்கள் அந்த பகுதிகளில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    English summary
    Amphan Storm makes landfall in between West Bengal and Bangaldesh today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X