சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மான்ஸ்டர் போல மாறும்.. இந்த முறை "ஏமாறாத சென்னை''.. வெதர்மேன் கொடுத்த ஆம்பன் புயல் அப்டேட்!

வேகமாக வலுப்பெற்று வரும் ஆம்பன் புயல் மான்ஸ்டர் போல மாறி அதிக வேகம் எடுக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டு உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வேகமாக வலுப்பெற்று வரும் ஆம்பன் புயல் மான்ஸ்டர் போல மாறி அதிக வேகம் எடுக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டு உள்ளார்.

Recommended Video

    Weather Update : Chances for rain over Tamil Nadu | Amphan Cyclone

    ஆம்பன் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே செல்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. ஆனால் இது தமிழகத்தை தாக்காமல் விலகி சென்றுள்ளது. இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும்.

    வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 650 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது.

    ஆம்பன் புயலே வந்தாலும் இதுதான் நிலை.. சென்னையை தாக்கும் வெப்ப காற்று.. நாளையிலிருந்து புது சிக்கல்! ஆம்பன் புயலே வந்தாலும் இதுதான் நிலை.. சென்னையை தாக்கும் வெப்ப காற்று.. நாளையிலிருந்து புது சிக்கல்!

    தமிழகத்தை தாக்காது

    தமிழகத்தை தாக்காது

    இந்த புயல் தமிழகத்தை தாக்காது. தமிழகம் அருகே எங்கும் கரையை கடக்காது என்று வானிலை மையம் கூறியுள்ளது.இந்த நிலையில் இந்த ஆம்பன் புயல் மிகவும் வலுவானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார். அவரின் பேஸ்புக் போஸ்டில் கூறி இருப்பதாவது, பொதுவாக மே மாதத்தில் உருவாகும் புயல்கள் மிகவும் வலுவானதாக இருக்கும். இந்த ஆம்பன் புயலும் அப்படித்தான்.

    மான்ஸ்டர் புயல்

    மான்ஸ்டர் புயல்

    ஆம்பன் புயல் ஒரு மான்ஸ்டர் போல உருவாகிக் கொண்டு இருக்கிறது. இந்த புயல் கடலில் இருக்கும் போது மிகவும் வலுவாக இருக்கும். ஒடிசா அருகே கரையை கடக்கும் போது வேண்டுமென்றால் வலிமை கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த புயல் மான்ஸ்டர் போல இருக்கும். இந்த புயல் 915-925hpa (ஹெக்ட்டோபாஸ்கல்) வேகத்தில் இருக்கும். 940-950 hpa வேகம் வரை இது அடைய கூடும்.

    இதற்கு முன் வந்த புயல்கள்

    இதற்கு முன் வந்த புயல்கள்


    இதற்கு முன் வந்த புயல்கள் போலவே ஆம்பன் புயலும் வலிமையாக இருக்க வாய்ப்புள்ளது.

    1999 ஓடிசா புயல் - 912 hPa
    1990 ஆந்திர பிரதேசம் புயல் - 912 hPa
    1991 வங்கதேச புயல்- 918 hPa
    1977 ஆந்திர பிரதேச புயல் - 919 hPa
    1963 வங்கதேச புயல் - 920 hPa
    2007 கோனு புயல் - 920 hPa
    2019 க்யார் புயல் - 922 hPa
    1989 கே புயல்- 930 hPa
    2001 குஜராத் புயல் - 932 hPa
    2019 ஃபனி - 932 hPa
    கஜா புயல் - 976 hPa
    வர்தா புயல் - 975 hPa
    தானே புயல் - 969 hPa

    இந்த லிஸ்டில் பெரும்பாலும் ஆம்பன் புயலும் சேர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    சென்னை ஏமாறவில்லை

    சென்னை ஏமாறவில்லை

    இதற்கு முன் ஃபனி புயல் தமிழகத்தை தாக்குவது போல வந்தது. முக்கியமாக சென்னையை தாக்குவது போல வந்து விலகி சென்றது. ஆனால் ஆம்பன் அப்படி நமது இதயத்தை நொறுக்கவில்லை. நமக்கு இந்தமுறை வடை போகவில்லை. இந்த புயல் கண்டிப்பாக தமிழகத்திற்கு வராது என்று தொடக்கத்திலேயே தெரிந்துவிட்டது. இந்த முறை சென்னை மழைக்கு எதிர்பார்த்து ஏமாறவில்லை. ஆனால் இதற்கு முன் நிறைய புயல்கள் சென்னைக்கு அருகே வருவது போல வந்துவிட்டு தூரமாக சென்றுவிட்டது .

    கடக்காது

    கடக்காது

    2018ல் பெத்தாய் புயல், 2010ல் ஜல் புயல், 2018ல் கஜா புயல், 2013ல் மாடி புயல், 2019ல் ஃபனி புயல், 2008ல் கைமுக் புயல், ஆகிய புயல்கள் சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த புயல்கள் வேறு வேறு இடத்தில் கரையை கடந்தது. இதனால் அங்கு மழை பெய்தது. இந்த ஆம்பன் புயலும் சென்னையில் கரையை கடக்காது. இதனால் சென்னையில் மழைக்கு பதில் வெப்ப காற்று வீசும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

    English summary
    Amphan Storm: The cyclone will get stronger and become like a monster says Tamilnadu Weatherman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X