இங்க கல்யாணம்.. "டேட்" இல்லை.. ஏரியா ஏரியாவாக அலையும் எடப்பாடி டீம்.. கடைசியில் இப்படி ஒரு நிலையா?
சென்னை: ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்துவதில் முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் எப்படியாவது ஒற்றை தலைமையை பெற்று விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். ஆனால்.. எதுக்கு ஒற்றை தலைமை.. இரட்டை தலைமையே இருக்கட்டுமே என்று ஓ பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்!
அதிமுகவில் ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11ம் தேதி நடக்க உள்ளது.

பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு எப்போதும் வானகரத்தில்தான் நடக்கும். வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில்தான் பொதுக்குழு நடக்கும். ஆனால் இந்த முறை இரண்டாவது பொதுக்குழு அங்கு நடக்க முடியாது. காரணம் அந்த வாரம் முழுக்க பல்வேறு திருமணங்களுக்கு அங்கு புக் செய்யப்பட்டுள்ளது. இதனால் டேட் கேட்டு சென்ற அதிமுக நிர்வாகிகளுக்கு டேட் இல்லை என்று திருமண மண்டப நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கூட்டம் நடப்பதற்கு முன்னர் இரண்டு நாட்கள் அலங்காரம் மற்றும் பாதுகாப்பிற்காக சேர்த்து மொத்தம் 3 நாட்கள் தேதி லாக் செய்யப்பட வேண்டும்.

சென்டிமென்ட்டாக விரும்பவில்லை
ஆனால் ஸ்ரீ வாரு மண்டபத்தில் தேதி இல்லாத காரணத்தால் வேறு இடத்தில் பொதுக்குழு நடத்த அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த 4 வருடமாக இங்குதான் அதிமுக பொதுக்குழு நடந்தது. தேதி கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி செண்டிமெண்ட் ரீதியாக இந்த இடத்தை எடப்பாடி தரப்பு விரும்பவில்லையாம். கடந்த முறை கடைசி நேரத்தில் ஒற்றை தலைமை கைவிட்டு போனதால் சென்டிமென்ட்டாக இந்த இடத்தை எடப்பாடி விரும்பவில்லை என்கிறார்கள்.

இடத்தேர்வு
இந்த நிலையில்தான் இடம் தேடி எடப்பாடி டீம் அலைந்து கொண்டு இருக்கிறது. மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் இன்று ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அங்கு 3000 கார்களை நிறுத்த இடம் உள்ளது. பெரிய வளாகம் உள்ளது. 5000 பேர் வரை அங்கு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். ஆனால் இங்கும் கூட்டத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம் . இது மெயின் ஏரியாவில் இருக்கிறது.

மீனம்பாக்கம் கல்லூரி
இதனால் கடுமையான டிராபிக் ஏற்படும். அதோடு பாதுகாப்பு வழங்குவது கடினம். அதோடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதாவது உயர் கல்வித்துறையிடம் இங்கு கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். ஆனால் உயர் கல்வித்துறை ஏற்கனவே வாய் மொழியாக அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் அரசியல் கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது என்று உயர் கல்வித்துறை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கும் கூட்டம் நடக்காது.

அனுமதி இல்லை
இதனால் ஓஎம்ஆர், ஈசிஆர் பகுதியில் கூட்டம் நடத்த எடப்பாடி திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக எடப்பாடி ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் ஓஎம்ஆர் மற்றும் உதண்டி போன்ற பகுதிகளில் ஆய்வு செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருக்கும் தனியார் மண்டபங்களில் விழா நடத்த முடியுமா என்று ஆலோசனை செய்து வருகிறார்களாம். இங்கு மண்டபம் ரெடி செய்து, பின்னர் போலீசிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.