சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.3 லட்சம் சொகுசு பைக்கில் டெஸ்ட் டிரைவிங்.. ஓனர் அசந்த நேரம் பைக்குடன் சர்ரென எஸ்கேப்பான இளைஞர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சொகுசு பைக்கில் டெஸ்ட் டிரைவிங், பைக்குடன் தப்பிய இளைஞர்!- வீடியோ

    சென்னை: சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் விளம்பரம் பார்த்து டெஸ்ட் டிரைவிங் சென்ற இளைஞர் லாவகமாக பைக்கை திருடி சென்றுவிட்டார்.

    ஓஎல்எக்ஸ் என்ற செயலி மூலம் இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஃபர்னிச்சர், பிரிட்ஜ், சைக்கிள், வாஷிங் மெஷின் என பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    அதன்படி பொருட்களின் புகைப்படமும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவலும் அதில் கொடுக்கப்படும். அதை வைத்து தங்களுக்கு தேவைப்பட்டால் அதனை வாங்குவதுதான் ஓஎல்எக்ஸ் என்பதாகும்.

    ஓஎல்எக்ஸ் இணையதளம்

    ஓஎல்எக்ஸ் இணையதளம்

    இந்நிலையில் சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் முகம்மது அஃப்ரின். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் வாங்கிய சொகுசு பைக் ஒன்றை விற்க முடிவு செய்து அதை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்தார்.

    ஆட்டோ டிரைவர்

    ஆட்டோ டிரைவர்

    ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள பைக் விளம்பரத்தை பார்த்துவிட்டு அஃப்ரினை ஒருவர் தொடர்பு கொண்டு இந்த பைக்கை வாங்க எனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அன்று பிற்பகலில் பைக்கை எடுத்து கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும் படி அந்த நபர் அழைக்கவே அஃப்ரினும் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவரை தனது மாமா என அந்த நபர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    அஃப்ரினிடம்

    அஃப்ரினிடம்

    இதையடுத்து பைக்கின் ஆவணங்களை சரிபார்த்த அந்த நபர் டெஸ்ட் டிரைவிங் செல்லும் என கூறியுள்ளார். அப்போது அஃப்ரினும் சரி என சொல்ல இருவரும் அதே பைக்கில் புறப்பட்டனர். மிண்ட் பகுதிக்கு சென்ற போது டயரில் காற்று குறைவாக உள்ளது என கூறி கீழே இறங்கி பார்க்குமாறு அஃப்ரினிடம் கூறியுள்ளார்.

    பைக்குடன் தப்பிய நபர்

    பைக்குடன் தப்பிய நபர்

    இதை நம்பி பைக் அவர் கீழே இறங்கி பார்த்ததும் நொடிப்பொழுதில் அந்த நபர் பைக்குடன் பறந்துவிட்டார். அவரை பிடிக்க அஃப்ரின் சிறிது தூரம் ஓடியும் அது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பைக்கில் புறப்பட்ட இடத்துக்கே வந்து ஆட்டோ டிரைவரிடம் கோபமாக சண்டையிட்டுள்ளார்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    அப்போது ஆட்டோ டிரைவர் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரூ. 2 ஆயிரம் தருவதாகவும் மாமா போல் நடிக்க வேண்டும் என்று கூறி தன்னை அந்த நபர் அழைத்து வந்ததாகவும் தன்னுடைய செல்போனில் இருந்தே அஃப்ரினை தொடர்பு கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அஃப்ரின் போலீஸில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

    English summary
    An youth who saw an advertisement in OLX that Rs.3.5 lakhs worth bike is going to sale. He wants to do test driving to the owner. After that he escaped with the bike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X