சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி.. அப்படியே எடப்பாடி பழனிச்சாமியுடன் மீட்டிங்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று அவர் இல்லத்தில் சந்தித்த பாமக இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிக்கைவிடுத்தார்.

கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

Anamumani Ramadoss, met Chief Minister Edappadi Palanisamy

பின்னர் நிருபர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். குடியுரிமை சட்டத் திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. திமுக மக்களை தூண்டி இழிவான அரசியல் நடத்துகிறது என்றார்.

இந்த சந்திப்பின்போது, காவிரி டெல்டா பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற, பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை சட்டமாக்கியதற்கும் பெட்ரோல் கெமிக்கல் மண்டலப் பகுதி அறிவிப்பை ரத்து செய்ததற்கும் முதல்வரிடம் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து அன்புமணி ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதுபற்றி ஜி.கே.மணி வெளியிட்ட ட்வீட்டர் பதிவில்,

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அவர்களின் உடல் நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களும், நானும் (ஜி.கே.மணி) நேரில் சென்று நலம் விசாரித்தோம். ஏ.கே.மூர்த்தி, கே.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Anamumani Ramadas, MP and leader of the PMK, met Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy at his residence today, has called for a caste census in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X