• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வண்டியை நிப்பாட்டு.. பைலட் கையை தட்டிய மகேஷ்.. நிறைந்து வழிந்த அன்பு.. நெகிழ்ந்த மூதாட்டி

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் மூதாட்டி ஒருவர் பேச வருவதை கண்டு அவரது டிரைவரின் கையை தட்டி வண்டியை நிப்பாட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஒருவர் நாட்டுக்கே ராஜாவானாலும் அவர் நடந்து கொள்ளும் விதம், பொதுமக்களிடம் காட்டும் அன்பு, இவைதான் பெரிதும் பேசப்படும். இவ்வாறு பொதுமக்களுடன் பொதுமக்களாக ஐக்கியமானால்தான் அவர்களுடைய நல்லது கெட்டதற்கு ஏற்ப ஆட்சியை நடத்த முடியும்.

சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!

இது காலத்திற்கேற்ப மாறி வந்தாலும் தற்போது பெரும் யூடர்ன் அடித்து அந்த அன்பு, பண்பு ஆகியவற்றை ஆட்சியாளர்கள் பின்பற்றத்தான் செய்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என மக்கள் எளிதில் அணுகும் தூரத்தில்தான் இருந்தார்கள். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி காரில் செல்லும் போது காரை நிறுத்தி பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிவதையே வழக்கமாக கொண்டவர்.

காட்சி மாறாது

காட்சி மாறாது

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதற்கேற்ப தற்போதைய திமுக ஆட்சியில் முதல்வர் முதல் எம்எல்ஏக்கள் வரை மக்கள் சேவகர்களாகவே இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் வெவ்வேறு ஊர்களுக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க செல்லும் போது வழியில் காத்திருக்கும் பொதுமக்களிடம் நின்று நலம் விசாரித்துவிட்டு குறைகளை கேட்டறிந்துவிட்டுதான் செல்வார். கருணாநிதி, ஸ்டாலின் வழியில் வந்த திமுகவின் இள மும்மூர்த்திகளான அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பண்புடையவர்களாகவே திகழ்கிறார்கள். இதற்கு கீழ்கண்ட உதாரணங்களை சொல்லலாம்.

மன்னார்குடி எம்எல்ஏ

மன்னார்குடி எம்எல்ஏ

டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக திகழ்கிறார். இவர் தற்போது 3-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு முறையும் மக்களோடு மக்களாக பயணித்தவர். யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் உதவி வந்தவர். சமூக அவலகங்களுக்கு குரல் கொடுப்பவர். ட்விட்டரில் உதவி கேட்டாலும் அதை சம்பந்தப்பட்டவருக்கு டேக் செய்பவர். மின்னும் மன்னை திட்டத்தை முன்னெடுத்தி நடத்தி வருகிறார்.

சேப்பாக்கம் எம்எல்ஏ

சேப்பாக்கம் எம்எல்ஏ

அது போல் சேப்பாக்கம் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்ற நாள் முதல் அங்குள்ள குடிசை பகுதிகளில் குனிந்து நெளிந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அது போல் பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசி வரும் கழிவறைக்குள் சென்று ஆய்வு செய்தார். ஒரு இடத்தில் சுத்தமான தண்ணீர் இல்லை என கூறியதால் அங்கு என்ற உதயநிதி தண்ணீரின் தரத்தை குடித்து பார்த்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும் உள்ளார். இவர் நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து விட்டு தனது காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அனைவரிடமும் வணக்கம் சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார். அப்போது ஒரு மூதாட்டி ஏதோ சொல்ல முயன்றார். உடனே தன் கைகளால் டிரைவரின் கையை தட்டி வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவரிடம் கனிவுடன் குறைகளை கேட்டுவிட்டு புறப்பட்டார். மூதாட்டி பேசும் போது முகத்தை திருப்பி டிரைவரை வாகனத்தை நிறுத்த சொன்னால் அது மூதாட்டியை அவமதிப்பதாகும் என்பதால் அவர் கையை தட்டி அசைவு காட்டியது வைரலாகி வருகிறது.

English summary
Minister Anbil Mahesh Poyyamozhi stops his vehicle and listen to elder woman's demand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X