சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் 3 பெண்களுக்கும் விஷ்ணு மடியில் வைத்துதான் மொட்டை போட்டோம்.. மைத்துனர் பேச்சுக்கு அன்புமணி வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    இதனால்தான் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தோம் - அன்புமணி விளக்கம்!

    சென்னை: "என் 3 பெண்களுக்கும் விஷ்ணுவின் மடியில் வெச்சுதான் காதுகுத்து நடத்தினோம்... ஆனா இவர் இப்படி பேசுவார்ன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை" என்று மைத்துனர் விஷ்ணு பிரசாத் பேச்சு குறித்து அன்புமணி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    அன்புமணி ராமதாஸின் மைத்துனர்தான் எம்.கே.விஷ்ணு பிரசாத் என்பவர். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அதிமுக-பாமக கூட்டணி அறிவிப்பு வெளியானது குறித்து இவர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    அதில், "தமிழகத்தை ஆள அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாமக தலைவர்கள் சொன்னதை போன வாரம்தான் பத்திரிகைகளில் படித்தோம், ஆனால், அதுக்குள்ள கூட்டணி ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள் என்றால், இதன் மர்மம்தான் என்ன? உங்கள் சமுதாயத்தை அப்படியே அங்க கொண்டு போய் அடமானம் வைத்து விட்டீர்களே.

    வெளுத்து வாங்கினார்

    வெளுத்து வாங்கினார்

    இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை, கூட்டணி பேரம்தான் நடந்துள்ளது, கண்டிப்பா பாமக தேர்தலில் தோற்கதான் போகிறது. குரு ஆத்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது" என்று வெளுத்து வாங்கி இருந்தார். விஷ்ணுபிரசாத் அப்படி கூறிய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் அன்புமணியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சொன்னதாவது:

    காதுகுத்து

    காதுகுத்து

    "அவரது குற்றச்சாட்டால் எங்கள் கூட்டணிக்கோ, கட்சிக்கோ பாதிப்பு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம். அவர் என்னுடைய காலேஜ் நண்பர். 30 வருஷமாக எனது மைத்துனர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு இப்படி பேசுவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனது 3 பெண்களுக்கும் அவர் மடியில் வெச்சுதான் காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினோம். அதனால அவர் இப்படி பேசியது எனக்கு மட்டுமல்ல, எனது மனைவிக்கும் வருத்தம்தான்.

    ஒரு சீட் கிடைக்கும்

    ஒரு சீட் கிடைக்கும்

    கருணாநிதி இருந்தபோது எங்களை விமர்சிக்க வேண்டும் என்றால், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை எங்களை விமர்சனம் செய்வதற்கென்றே கலைஞர் அவர்களை பயன்படுத்துவார். ஆனால் இப்போதைய தலைவர் ஒரு படி மேலே போய், எங்களது குடும்பத்திலிருப்பவரை வைத்தே, விமர்சிக்க வைத்திருக்கிறார்.

    வருத்தம்

    வருத்தம்

    விஷ்ணுபிரசாத் இப்படி எங்களை விமர்சித்திருக்கிறார். அதனால் அவருக்கு ஒரு சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனா அவர் இப்படி ஒரு சீட்டுக்காக, ஒரு தொகுதிக்காக இந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று வருத்தத்துடன் கூறினார் அன்புமணி.

    English summary
    Anbumani Ramadoss said that I was not expecting Dr.Vishnu Prasad to speak like this
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X