சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் ஏன் போட்டியிடலைன்னு தெரியுமா?

அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் போட்டியிட போவது இல்லை என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடாததற்கு காரணம் இதுதானாம்!- வீடியோ

    சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் ஏன் போட்டியிடலைன்னு தெரியுமா? காரணம் இதுதானாம்!

    இப்போதைக்கு தருமபுரியின் சிட்டிங் எம்பிதான் தருமபுரி. சமீபத்தில் அதிமுக கூட்டணியில் 7+1 என்று ஒப்பந்தமாகி ஐக்கியமானது பாமக!

    தருமபுரியை தொகுதியை பொறுத்தவரை ஆஹா ஓஹோன்னு இல்லைன்னாலும் சொல்லிக் கொள்ளும்படியான அதாவது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தொகுதியை தக்க வைத்து கொண்டிருப்பவர் அன்புமணி. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பேயே அன்புமணி ஆரணி, அல்லது தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வந்தது.

    எனக்கு எதுவும் வேண்டாம்.. பெரியார் போல இருந்து விட்டுப் போகிறேன்.. வைகோ திடீர் குமுறல் எனக்கு எதுவும் வேண்டாம்.. பெரியார் போல இருந்து விட்டுப் போகிறேன்.. வைகோ திடீர் குமுறல்

    7 தொகுதிகள்

    7 தொகுதிகள்

    எனினும் பாமக போட்டியிட போகும் அந்த 7 தொகுதிகள் என்ன, அதன் வேட்பாளர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற ஆர்வம் கடந்த 20 நாளாக எழுந்து வந்தது. இந்நிலையில் நேற்று 7 தொகுதிகளில் பாமக போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் உத்தேச பெயர் பட்டியல் ஒன்று கசிந்து வலம் வந்தது.

    சவுமியா பெயர்

    சவுமியா பெயர்

    அதில் முதல் தொகுதியே தருமபுரி என்றுதான் இருந்தது. ஆனால் வேட்பாளர் அன்புமணி இல்லை, அவரது மனைவி சவுமியா அன்புமணி பெயர் பளிச்சிட்டது. இது எதிர்பாராத ஒரு ஸ்வீட் ஷாக் ஆகவும் இருந்தது. அன்புமணி பெயர் ஏன் இல்லை, அதுவும் தர்மபுரியில் போட்டியிடுவதாக ஏற்கனவே பெயர் அடிபட்டதே, என்னவாக இருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டது.

    உடல்நிலை

    உடல்நிலை

    ஆனால் இப்போது 2 விஷயம் தெரியவந்துள்ளது. முதலாவது, இப்போதைக்கு ஒரு இடம் விடாமல் பட்டிதொட்டிகளில் பாமக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் டாக்டர் ராமதாஸால் முன்புபோல் சூறாவளி பிரச்சாரம் செய்ய முடியாத நிலை உள்ளதாம். அதனால்தான் அன்புமணி மட்டும் இந்த முறை பிரச்சாரத்தில் களம் இறங்க உள்ளார்.

    பெயர் பட்டியல்

    பெயர் பட்டியல்

    இரண்டாவதாக, 7+1 என்பதில் அந்த +1 என்பது அன்புமணிதானாம்! அதாவது ராஜ்ய சபாவுக்கு போட்டியிட போவதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் 7 பேர் கொண்டி வேட்பாளர் பெயர் பட்டியலில் அன்புமணி பெயர் மிஸ்ஸிங்!

    சவுமியா

    சவுமியா

    அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையின்போது ஜெயலலிதாவைப் போல ராஜ்யசபா சீட்டைக் கொடுக்காமல் எங்கே ஏமாற்றிவிட போகிறார்களோ என்று வலியுறுத்தி கொண்டே வந்தனர். அதனால் எப்படியும் அந்த ஒரு சீட்டு சவுமியா அன்புமணிக்கு தான் தரப்படும் என்றும் நினைக்கப்பட்டு வந்தது.

    வெற்றி

    வெற்றி

    ஆனால் இப்போது தருமபுரியில் சவுமியா, டெல்லிக்கு அன்புமணி என்று தகவல் கசிந்துள்ளது. இந்த விஷயம் உண்மையானால் இருவருமே வெற்றி பெற்று வாகை சூடுவார்கள் என்பதே மக்களின் கணக்காக உள்ளது!

    English summary
    Anbumani Ramadoss is said to be not going to compete in Dharmapuri Constitution in MP Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X