அதிர்ந்த அரங்கம்! தலைவரானார் அன்புமணி! உற்சாகமான பாட்டாளிகள்! மேடையில் அரங்கேறிய சுவாரசிய நிகழ்வுகள்
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் இரண்டாவது தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகனும் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அக்கட்சியினர் 15 நிமிடங்களுக்கும் மேலாக உற்சாக முழக்கமிட்டனர். கூட்டத்தில் சில முக்கிய மற்றும் சுவாரசிய நிகழ்வுகளை பார்க்கலாம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி அதாவது சனிக்கிழமையான இன்று காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்தார்
நாளை பாமக பொதுக்குழு..! பாமக தலைவர் 'மாற்றம்’.. தலைவராக ’முன்னேற்றம்’..! சாதிப்பாரா 'அன்புமணி’.!

அன்புமணி ராமதாஸ்
கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்தே கால் நூற்றாண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த தீரன், ஜிகே மணிக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் 3வது தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

ஜிகே.மணி பேச்சு
சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஜிகே.மணி, "தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்சியின் எதிர்கால நலன் கருதி மறுப்பு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கியமான தீர்மானத்தை வாசிக்க இருக்கிறேன். இதனை பாட்டாளி மக்கள் கட்சியினர் அன்போடு ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்வது மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உருவாக்கிய பாட்டாளி மக்கள் கட்சி. இந்தக் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள் சாதனைகள் ஏராளம்.

அரசியல் சக்தி
அரசுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஆதரிக்கும் கட்சியாகவும் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்கும் கட்சியாகவும் இருந்திருக்கிறது. அரசுக்குப் பல ஆலோசனைகளை வழங்கிய கட்சியாகவும் பாமக உள்ளது. பல அரசியல் கட்சிகளை பயணத்தை தீர்மானிப்பதிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பங்கு உள்ளது.கட்சியின் எதிர்கால நலன்கருதி கட்சிக்கு புதிய தலைமுறை கொண்டு வர வேண்டும் என நானே விரும்பினேன். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஆன அன்புமணி ராமதாசிடம் தெரிவித்த போது இது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு நிர்வாகிகள் அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தலைவர் அன்புமணி
அதன்படி, இளம்வயதிலேயே மத்திய அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக வரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசினார். அப்போது அரங்கில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் உற்சாக முழக்கம் இட்டனர். இதைடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் 2வது தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஜிகே மணி முன்மொழிந்த நிலையில் பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வழிமொழிந்தனர்.