சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லுங்கியை மடித்து கட்டி.. கடைசியில் அன்புமணியை கொரோனா டீ போட வைத்துவிட்டதே.. வைரல் போட்டோ

3 வாரத்துக்கு ஊரடங்கு தேவை என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கடைசியில் இந்த கொரோனா அன்புமணியை டீ போட வைத்துவிட்டதே என்று நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.. லுங்கியை இழுத்து மடித்து கட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து டீ போடுகிறார் அன்புமணி...இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸுக்கு எதிரான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன் வைத்து வருகிறார்கள் டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்! பிரதமர் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பிருந்தே, அதாவது ஒரு வாரத்துக்கு முன்னரே, இதே கோரிக்கையை வலியுறுத்தி வருபவர் எம்பி அன்புமணி ராமதாஸ். இன்றுகூட இதை பற்றி அன்புமணி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

anbumani ramadoss has requested that the curfew be extended for 3 weeks

அதில், "கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படாத நாடு என்று கூறப்பட்ட இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 61 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. அனேகமாக நாளைக்குள் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 500&ஐ கடக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் இந்தியா ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது என்று பொருள்.

இந்தியா முழுவதும் இன்று ஊரடங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையே மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கும் போது, சில இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனாலும் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே, இன்றைய ஊரடங்கை நல்லத் தொடக்கமாக வைத்துக் கொண்டு 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் மக்கள் ஊரடங்கு உத்தரவினை மதித்து வீட்டிலேயே பொழுதை பாதுகாப்புடன் கழித்து வருகிறார் அன்புமணி.. இது சம்பந்தமாக ஒரு போட்டோவும் வெளியாகி உள்ளது.. கிச்சனில் டீ போட்டு கொண்டிருக்கிறார் அன்புமணி.. டி-ஷர்ட் அணிந்து... லுங்கியை இழுத்து மடித்து கட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்துள்ளார்.. பால் பாக்கெட்டை பிரித்து பாத்திரத்தில் ஊற்றி... டீ போட தயாராகிறார்.. இந்த போட்டோ எப்படி வெளியானது என்று தெரியவில்லை.. ஆனால் டாக்டரும், எம்பியுமான அன்புமணியை கொரோனா டீ போட வைத்து விட்டதே என்று கமெண்ட்கள் வர ஆரம்பித்துள்ளன!

English summary
anbumani ramadoss has requested that the curfew be extended for 3 weeks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X