டிச.31-ல் பாமக பொதுக்குழு... செயல் தலைவர் ஆகிறாரா அன்புமணி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 31-ம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் என்றும், அது 2019-ம் ஆண்டுக்கு விடைகொடுப்போம்; 2020-ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி வழங்குவது குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

சிறப்பு பொதுக்குழு
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31-ம் தேதி நடைபெறவுள்ளதால் இப்போதே அது தொடர்பான பரபரப்பு அக்கட்சி நிர்வாகிகளிடையே பற்றிக்கொண்டது. வழக்கமாக தைலாபுரத்தில் நடக்கும் கூட்டம் இந்த முறை திண்டிவனம் -புதுச்சேரியில் சாலையில் உள்ள ஓமந்தூரில் நடைபெறுகிறது.

கட்சிப்பணிகள்
நிர்வாகிகள் சார்பில் 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்சி வளர்ச்சிப்பணிகள், 2020-ம் ஆண்டும் மேற்கொள்ளவேண்டிய கட்சிவளர்ச்சிப்பணிகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பாமக தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்திற்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாது வர வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளார்.

புரோமோஷன்
பல வருடங்களாக பாமக இளைஞரணித் தலைவராக உள்ள அன்புமணிக்கு, இந்த பொதுக்குழுவில் செயல்தலைவர் பதவி வழங்குவது பற்றி முக்கிய முடிவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். அன்புமணிக்கு புரோமோஷன் வழங்க பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவலுடனும், ஆர்வமுடனும் உள்ளார்களாம்.

சட்டமன்றத் தேர்தல்
மேலும், கூட்டணி விவகாரத்தில் இதே நிலைப்பாட்டை தொடர்வதா அல்லது புதிய முடிவெடுப்பதா என்பது பற்றியும் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை அறிந்து கொள்ள அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் விரும்புகிறாராம். இதனால் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications