• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அன்புமணியின் 'ஒரே' வார்த்தை.. டோட்டல் எதிர்க்கட்சிகளும் 'க்ளோஸ்' - மனசையே கரைச்சிட்டார்!

Google Oneindia Tamil News

சென்னை: சைதை துரைசாமிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ், சென்டிமெண்ட்டாக பல விஷயங்களை டச் செய்து அட போட வைத்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் நடைபெற உள்ள நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கும் வகையில், அதனை முறியடித்துக் காட்டுவோம் என்று அதிமுக கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

''மம்தா மருமகனை முதல்வராக்க விரும்புகிறார்; மோடி ஜனநாயக ஆட்சி அமைய விரும்புகிறார்''.. அமித்ஷா பளிச்!''மம்தா மருமகனை முதல்வராக்க விரும்புகிறார்; மோடி ஜனநாயக ஆட்சி அமைய விரும்புகிறார்''.. அமித்ஷா பளிச்!

 அரிய அரசியல்வாதி

அரிய அரசியல்வாதி

அந்த வகையில், இன்று சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பிரசாரம் செய்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து பேசினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அன்புமணி, "மூன்று தலைமுறைகளாக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் சைதை துரைசாமி. என்னைப்பொறுத்த வரை அவர் ஒரு அரிய அரசியல்வாதி. ஒரு சமூக சேவகர். அவரை நான் அரசியல்வாதியாக பார்ப்பதை விட, ஒரு சமூக சேவகராக பார்க்கிறேன்.

 முப்பதாயிரம் பேர்

முப்பதாயிரம் பேர்

ஒரு நபர், இரண்டு நபர் கிடையாது. இதுவரை சுமார் முப்பதாயிரம் பேரை படிக்க வைத்து, கல்வியைக் கொடுத்துள்ளார். இவரால் கல்வி பெற்றவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கின்றனர். இது சாதாரண சேவை கிடையாது.

 சாதாரணமாக கேட்கிறார்

சாதாரணமாக கேட்கிறார்

இந்த காலத்தில் ஒருத்தரை படிக்க வைத்து கொண்டு வருவது என்பதே மிகப்பெரிய காரியம். 30,000 பேரை எந்த ஜாதி, மதம், இனம் என்று எதுவும் பார்க்காமல் ஏழை மக்களை படிக்க வைத்து, பயிற்சி கொடுத்து உலகெங்கிலும் பல உயர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொடுத்தவர். இன்று இங்கு சாதாரணமாக நின்று கொண்டு 'எனக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள்' என்று மிக எளிமையாக கேட்கிறார். அவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றிப்பெற வைக்க வேண்டியது நமது கடமை" என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

 கடும் சவால்

கடும் சவால்

சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில், தி.மு.க சார்பில் வேட்பாளராக மா.சுப்பிரமணியன், அ.தி.மு.க-வில் சைதை துரைசாமி, மக்கள் நீதி மய்யத்தில் சினேகா மோகன்தாஸ் ஆகியோர் களம் காண்கின்றனர். இங்கு, திமுக vs அதிமுக என்பதே பிரதான மோதலாக உள்ளது. இங்கு சிட்டிங் எம்.எல்.ஏவாக திமுகவின் மா.சுப்பிரமணியன் இருந்தாலும், இம்முறை இங்கு சைதை துரைசாமி கடும் சவாலாக இருப்பார் என்கிறது கள நிலவரம்.

English summary
anbumani ramadoss praise saidai duraisamy - அன்புமணி ராமதாஸ்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X