சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் இந்தியாவில்தானே இருக்கு?.. கேரளத்துக்கு சென்ற பிரதமர் தமிழகத்துக்கு வராதது ஏன்?- அன்புமணி

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளத்துக்கு சென்ற பிரதமர் தமிழகத்துக்கு வராதது ஏன்?- அன்புமணி- வீடியோ

    சென்னை: தமிழகம் இந்தியாவில் தான் உள்ளதா? , கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா சென்ற பிரதமர் தமிழகம் வராதது ஏன்? என சென்னை அம்பத்தூரில் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை அம்பத்தூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்ட கர்நாடக அரசு கொடுத்த ஆய்வறிக்கையை பெற்று கொண்டு முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    அது தமிழகத்திற்கு எதிரானது , சட்டத்திற்கு எதிரானது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது ,காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது தமிழக அரசை கேட்காமல் காவிரியில் எதுவும் செய்யக் கூடாது என சட்டம் உள்ளது.

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    இருந்த போதும் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அரசியல் நோக்கத்திற்காக, தேர்தலுக்காக தமிழகத்திற்கு எதிரான செயலாக நான் பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்க வேண்டும்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    ஆய்வு செய்ய மத்திய அரசு கொடுத்த ஆணையை திரும்ப பெற வேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் மத்திய அரசு செயல்படுகிறது.

    குரல்

    குரல்

    அணைகள் காக்கும் சட்ட மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அவ்வாறு மசோதா நிறைவேற்றப்பட்டால் முல்லைபெரியாறு உள்ளிட்ட மூன்று அணைகள் தமிழகத்தை விட்டு சென்று விடும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்திக்காமல் கடமைக்காக முதல்வர் சந்திக்கிறார் போர்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைப்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    தேர்தல்

    தேர்தல்

    தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பாமக உள்ளது. அமைதியான முறையில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். இடைத்தேர்தல் நடைபெறாது, நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும். எந்த நேரத்திலும் தேர்தலை எதிர் கொள்ள பாமக தயாராக உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

    இந்தியாவிலா இருக்கு

    இந்தியாவிலா இருக்கு

    பலவீனமான முதலமைச்சர், அடிமை முதலமைச்சர் தமிழகத்தில் உள்ளதால் பிரதமர் புயல் சேதங்களை பார்வையிட தமிழகம் வரவில்லை. கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவை பார்வையிட்ட பிரதமர் தமிழகத்திற்கு வரவில்லை என்றாலும் உள்துறை அமைச்சராவது வந்து பார்த்து இருக்கலாம். தமிழகம் இந்தியாவில் உள்ளதா என்று சந்தேகம் எழுவதாகஅன்புமணி தெரிவித்தார்.

    English summary
    PMK leader Dr Anbumani Ramadoss has questioned the centre whether Tamil Nadu is in India or some other country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X