• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது..! பாமகதான் வித்தியாசமான கட்சி! சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு : இருப்பதிலேயே பாமக தான் வித்தியாசமான கட்சி எனவும், எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும் என பாமக இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாமக சார்பில் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“நாங்க குடிக்கிற இடம்” அட்டி மோதலில் இளைஞர் அடித்துக்கொலை.. விபத்தில் இறந்ததாக நாடகம் - 3 பேர் கைது!“நாங்க குடிக்கிற இடம்” அட்டி மோதலில் இளைஞர் அடித்துக்கொலை.. விபத்தில் இறந்ததாக நாடகம் - 3 பேர் கைது!

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்குகள் பெண்களுடையது. ஆனால் அது ஓட்டுகளாக மாறவில்லை. அதனை ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியில் யாரும் பொறுப்புக்காக வரவில்லை

பதவி ஆசை இல்லை

பதவி ஆசை இல்லை

தமிழகத்தில் நாம் கட்சியை தொடங்கி 32-ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை, நம்முடைய கட்சி வித்தியாசமானது ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பாக நிறைய சாதனைகளை செய்துள்ளனர். எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டியது நான் முதலமைச்சராக வரவேண்டும் என்று இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால் தான், நம்மால் மட்டுமே தமிழகத்தை உயர்த்த முடியும். 55-ஆண்டுகாலம் தமிழகத்தை இரு கட்சிகளும் ஆட்சி செய்துள்ளனர்.

முன்னேற்றம் ஏற்படல்லை

முன்னேற்றம் ஏற்படல்லை


ஆனால் தமிழகத்தில் எந்த முன்னேற்றம் ஏற்படல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். அதனால் இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு உள்ளதாகவும், புதியதாக பாமக 2.0 திட்டம் செயல்படுத்தி உள்ளது.
அடுத்த வரக்கூடிய தேர்தல்களில் புதிய யூகங்களை பயன்படுத்த உள்ளோம். இப்போதே அதனை நடைமுறை படுத்தி உள்ளோம். அனைத்து கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், வார்டுகளிலும் நம்முடைய கட்சி கொடி பறக்க வேண்டும். நம்முடைய அகராதியில் முடியாதது என்று ஏதும் இல்லை வரும் 2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் அதனை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் அதனை வாக்குகளால் மாற்ற வேண்டும்

மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

2026-ல் திமுக, அதிமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெறாது. அதிமுகவின் காலம் போய் விட்டது. அடுத்ததாக மக்கள் நம்மீது தான் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் எங்கும் அடிதடி கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், " அத்தியாவசிய பொருட்களின் விலை தற்போது அதிகமாகி உள்ளது. குறிப்பாக எண்ணெய், பருப்புகள், கேஸ் விலை உள்ளிட்டவை விலையேறி வருகிறது.கொரோனாவிற்கு பிறகு பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மத்திய மாநில அரசுகள் விலையேற்றத்தை தவிர்க்க வேண்டும்

பாமக 2.0 திட்டம்

பாமக 2.0 திட்டம்

பாமக 2.0 புதிய யூக்திகளும், வியூகங்களும் பயன்படுத்த இருக்கிறோம். 2016-ல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணியை விட பலமான திட்டங்களை வகுத்துள்ளோம். திமுக ஆட்சியில் கொரோனாவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக செயல்பட்டு உள்ளார்.மேலும் வருகின்ற 28 தேதி நடைபெற உள்ள சிறப்பு பொதுக் கூட்டத்தில் தலைவர் பதவிக்கு உங்கள் பெயர் அடிபடுகிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தின் நோக்கம் பாமக 2.0 , நேரில் வந்து பார்த்து என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

English summary
Anbumani Ramadoss, the youth wing leader of Pmk, has said that Pmk is a different party in existence and that he has no desire for office but once he comes to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X