சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களை எதிர்ப்பதுதான் திருமாவளவனின் அரசியல்.. ஆனால் லாபம் திமுகவுக்குத்தான்.. அன்புமணி பேச்சு

எங்களை எதிர்ப்பதுதான் திருமாவளவனின் அரசியல் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ramadoss Pressmeet: ஏண்டா.. பத்திரிகையாளர்களை அன்புடன் விளித்த டாக்டர் ராமதாஸ்!- வீடியோ

    சென்னை: திருமாவளவனுக்கு எங்களை எதிர்ப்பதுதான் அரசியல். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒருவருக்கொண்டால்தான் அரசியல் ஆதாயம் அடைவது திமுகதான்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Anbumani Ramadoss slams Thirumavalavan

    உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, "3 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்த ஒரே தலைவர் ராமதாஸ்தான். இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில்: 8 வழிச்சாலையை முதலில் ஆதரித்ததே திமுகதான். பிறகு, தேர்தலுக்காக எதிர்த்தது. ஆனால், நாங்கள் அப்படி இல்லை.. வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக ஒருபோதும் போராட்டம் நடத்தியது இல்லை.

    குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி.. சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி.. சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

    தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாமக போராடி வருகிறது. எல்லா சமுதாயமும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். திருமாவளவனுக்கு எங்களை எதிர்ப்பதுதான் அரசியல். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒருவருக்கொருவர் அடித்துகொண்டால் திமுகவுக்குதான் அரசியல் ஆதாயம்" என்றார்

    English summary
    Anbumani Ramadoss has criticized Thirumavalavan and DMK Leader MK Stalin in Chennai Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X