சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் கொச்சை.. உதயநிதி ஸ்டாலின் கீழ்த்தரம்.. சென்னை கூட்டத்தில் போட்டு தாக்கிய அன்புமணி

உதயநிதி ஸ்டாலின் பேச்சினை அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு தெருப் பேச்சாளர் போல உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார் என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே திமுக வேட்பாளர்களுக்காக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது பிரச்சார கூட்டத்திற்கு இளைஞர்கள் கூட்டம் திரண்டு வரவே செய்கிறது.

ஆனால் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களை உதயநிதி ஸ்டாலின் மோசமாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதாக பரவலாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

நாய்க்கு பேர் வச்சீங்களே.. சோறு வச்சீங்களா? சந்தானம் ஸ்டைலில் உதயநிதி கிண்டல்.. யாரை தெரியுமா? நாய்க்கு பேர் வச்சீங்களே.. சோறு வச்சீங்களா? சந்தானம் ஸ்டைலில் உதயநிதி கிண்டல்.. யாரை தெரியுமா?

மலிவான பேச்சு

மலிவான பேச்சு

திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணியம் மிக்க வார்த்தைகளுடன் பிரச்சாரம் செய்து வரும்போது, உதயநிதி மட்டும் தரக்குறைவாக பேசுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கேற்றார் அன்புமணி ராமதாசும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேடவாக்கத்தில் பிரச்சாரம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

"பொதுவாக பிரச்சாரத்தில் நாங்கள் வந்தால் இந்தத் திட்டம் தருவோம், அந்த தருவோம் என்று சொல்லும் ஸ்டாலின்., இப்போது என்னை பற்றியும் நிறுவனர் ராமதாஸ் குறித்தும் கொச்சையான வார்த்தைகளில் பேசி வருகிறார்.

உதயநிதி

உதயநிதி

அவர் மட்டும் இல்லை, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அப்படியேதான். கீழ்த்தரமான, தெருப்பேச்சாளர் பேசுவது போல பேசுகிறார். பொதுவாக, திமுகவினர் தனி நபர் விமர்சனங்களை மோசமாக செய்து வருகிறார்கள்.

பதில் சொல்றேன்

பதில் சொல்றேன்

நான் இப்பவும் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடறேன். மேடையை நீங்கள் போடுங்கள், நான் வருகிறேன். நீங்களும் வாங்கள், அல்லது உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைங்க. தமிழக திட்டம், நலன் குறித்து விவாதம் செய்யலாம். என்னை பற்றி என்ன வேணும்னாலும் சொல்லுங்க.. நான் அதுக்கு பதில் சொல்றேன்" என்றார்.

English summary
PMK Anbumani Ramadoss has criticized DMK Udhayanidhi Stalins speeches
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X