சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முப்படைகள் சந்திப்பு கூட்டம்... கட்சியை பலப்படுத்த களமிறங்கிய அன்புமணி

Google Oneindia Tamil News

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள முப்படைகளோடு அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் இன்று இந்த சந்திப்பை தொடங்கிய அன்புமணி, இனி வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகிய மூன்று படைகள் தான் பாமகவில் புதிதாக உருவாக்கப்பட்ட படைகள் ஆகும்.

தலைக்குனிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்தலைக்குனிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்

அன்புமணி

அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சிக்கென குறிப்பிட்ட வாக்குவங்கியை உருவாக்கும் நோக்கில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை பட்டை தீட்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறக்க முடிவு செய்திருக்கிறது பாமக தலைமை.

அன்புமணி பேச்சு

அன்புமணி பேச்சு

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களில் முப்படைகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய அன்புமணி, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். அன்புமணியின் பாசிட்டிவான பேச்சைக் கேட்டு தம்பிகள், தங்கைகள் படைகளில் இணைந்துள்ள இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகம் ஆகினர்.

வட தமிழகம்

வட தமிழகம்

வடதமிழகத்தில் 75 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்து அங்கு மட்டும் இந்தப் படைகளை முழு வீச்சில் செயல்பட திட்டமிட்டுள்ளது பாமக தலைமை. இந்தப் படைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

முப்படைகளில் வன்னியர் இன இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமல்லாமல், பாமகவின் மது ஒழிப்பு உள்ளிட்ட சித்தாந்தங்கள் மீது பற்று கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

English summary
anbumani ramadoss to strengthen party for next assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X