சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செய்தியாளர்கள் மீதான ஆதங்கத்தால் எந்த ஜாதி என கேட்ட கிருஷ்ணசாமி.. வக்காலத்து வாங்கும் அன்புமணி

Google Oneindia Tamil News

Recommended Video

    Krishnaswamy: பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி- வீடியோ

    சென்னை: செய்தியாளர்கள் மீதான ஆதங்கத்தால் எந்த ஜாதி என கிருஷ்ணசாமி கேட்டிருப்பார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதி கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த நிலையில் தென்காசி எம்பி தொகுதி கூட்டணிக் கட்சியான புதிய தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அங்கு அக்கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். இதையடுத்து தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக செய்தியாளர்களை நேற்றைய தினம் கிருஷ்ணசாமி சந்தித்தார்.

    10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்

    நீ என்ன சாதி

    நீ என்ன சாதி

    அப்போது அவரிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்தார் கிருஷ்ணசாமி. அப்போது நிருபர் ஒருவர் ஹைட்ரோகார்பன் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த கிருஷ்ணசாமி, நீ என்ன சாதி என கேட்டார்.

    தவிர்த்திருக்கலாம்

    தவிர்த்திருக்கலாம்

    அத்துடன் செய்தியாளர்களை ஒருமையில் பேசினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது அன்புமணி கூறுகையில் எந்த ஜாதி என கேட்டதை கிருஷ்ணசாமி தவிர்த்திருக்கலாம்.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    தமிழகத்தில் திமுகவுக்கு ஊடகங்கள் துணை போகின்றனர். ஊடகங்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் தான் கிருஷ்ணசாமி அவ்வாறு கேட்டிருப்பார் என அன்புமணி, கிருஷ்ணசாமிக்கு வக்காலத்து வாங்கி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு மாநிலங்களவை

    ஒரு மாநிலங்களவை

    தேர்தலுக்கு முன்பே 7 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என கறாராக தெரிவித்த அன்புமணி, கோதாவரி- காவிரி நதி இணைப்பு திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார் அன்புமணி.

    English summary
    Anbumani Ramadoss says that Krishnasamy might ask the reporter's caste because of disappointment over media which supports DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X