சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே!

Google Oneindia Tamil News

Recommended Video

    2000 வருட பந்தம்.. தமிழர் பெருமை.. சீன அதிபர் வருகைக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தது ஏன்?

    சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்கின் தமிழ்நாடு வருகை பெரும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு சிந்துசமவெளி காலத்தில் இருந்தே இருக்கிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

    சங்க காலம் தொடங்கி இன்று வரை நீடிக்கும் சீனாவுடனான உறவுக்கான சான்றுகள்:

    "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
    காலின் வந்த கருங்கறி மூடையும்
    வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
    தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
    கங்கை வாரியும் காவிரிப் பயனும்
    ஈழத்துண்ர்வும் காழகத் தாக்கமும்
    அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
    வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு"

    Ancient Relationship of TamilNadu with the China

    • இது சங்க இலக்கியமான பட்டினப்பாலை பாடல் (185-193). இதில் குணகடல் துகிரும் என்பது சீனா பட்டை குறிக்கிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து.
    • சீனாவின் பட்டுதான் காஞ்சிபுரத்தில் அறிமுகமானது. அந்த அறிமுகத்தால்தான் பன்னெடுங்காலமாக பட்டு உலகில் பட்டொளி வீசிப் பறக்கிறது காஞ்சிபுரம்.
    • சீனாவின் வரலாற்றை விவரிக்கும் சியன் ஹன்சுவில் இடம்பெற்றிருக்கும் ஹீவாங்க என்பது காஞ்சிபுரம் நகரத்தைதான் குறிக்கும் என்கிற கருத்தும் உண்டு.
    • காஞ்சிபுரத்து போதி தருமர்தான் சீனாவில் பெளத்த மதத்தையும் பல்வேறு கலைகளையும் நிறுவியவர்.
    • சீனா பயணி யுவான்சுவாங் கிபி 7-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார்.
    • பல்லவ, சோழ மன்னர்கள் சீனாவுடன் வணிக தொடர்பு வைத்திருந்ததற்கான சான்றாக ஏராளமான சீனா காசுகளை தொல்லியல்துறையின் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டெடுத்துள்ளனர்.
    Ancient Relationship of TamilNadu with the China

    • இன்று சீனா அதிபர் ஜின்பிங் 200 பேர் கொண்ட குழுவுடன் இந்தியாவுக்கு வருகை தருகிறார். சோழர்கள் காலத்திலும் இந்தியாவில் இருந்து தூதுக்கள், வர்த்தக குழுக்கள் பெரும் எண்ணிக்கையில் சீனா சென்றிருக்கிறது.
    • நாகப்படினத்தில் சீனபகோடா என அழைக்கப்பட்ட இடமானது சீனா துறவிகளுக்காக 2-வது நரசிம்ம வர்மன் காலத்தில் கட்டப்பட்ட பவுத்த விகாரை.
    • கிபி 13-ம் நூற்றாண்டு பயணி மார்க்கோபோலா சீனாவில் இருந்து இலங்கை மூலமாக தமிழ்நாட்டின் பெரியபட்டிணம் துறைமுகம் வந்தடைந்தார்.
    • தரங்கம்பாடி பகுதியில் கிபி 17-ம் நூற்றாண்டு சீனா மன்னர்களின் காசுகள் கிடைத்திருக்கின்றன.
    • நாடு விடுதலை அடைந்த பின்னர் சீனா பிரதமர் சூ என்லாய் தமிழ்நாடு வருகை தந்திருந்தார். அப்போது சென்னை ஐசிஎப், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இப்படி பழம்பெரும் காலம் முதல் இன்று வரை இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    English summary
    Here are some evidents of Ancient Relationship of TamilNadu with the China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X