சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலேஜுக்கே போகாமல்.. 1000-க்கும் மேல் போலி வக்கீல்களை உருவாக்கிய சட்ட கல்லூரி முதல்வர்.. அதிரடி கைது

ஆந்திர மாநில சட்டக்கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒழுங்கா காலேஜுக்கும் போகவில்லை.. அதே சமயத்தில் கை நிறைய சம்பளத்தில் ரெயில்வேயில் வேலை.. இப்படியே ஒருத்தர் சட்டக்கல்லூரி படித்து பட்டம் வாங்கிவிட்டார்! இவரை படிக்க வைக்க போலி சான்றிதழ் தந்தது சம்பந்தப்பட்ட ஆந்திர மாநில சட்டக்கல்லூரி முதல்வர்தான்.. இதையடுத்து அதிரடியாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. இப்படி போலி சான்றிதழ் தந்தே கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் போலி வக்கீல்களை இந்த முதல்வர் நடமாட விட்டுள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் விபின்.. 59 வயதாகிறது.. தெற்கு ரெயில்வேயில் 'கார்டு' ஆக வேலை பார்த்து வந்தவர். இப்படி ஒரு கவுரமான வேலை, கை நிறைய சம்பளத்தில் இருந்து கொண்டே, சைட் பிசினஸ் வேலையில் இறங்கி உள்ளார்.

இவர், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள எஸ்பிடிஆர்எம் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்துள்ளார்.. 2015 - 2018-ம் ஆண்டு வரை படித்திருக்கிறார்.. அப்படியானால், அரசு வேலை பார்த்து கொண்டே, உரிய அனுமதியும் வாங்காமல் இந்தபடிப்பை படித்து முடித்துள்ளார்.

போதி தர்மர் மீண்டும் வருவாரா?.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனாபோதி தர்மர் மீண்டும் வருவாரா?.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா

பட்டப்படிப்பு

பட்டப்படிப்பு

இதுஎப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை.. ஏனென்றால் குறைந்தபட்சம் 70 சதவீதம் அட்டன்டன்ஸ் சட்டக்கல்லூரியில் இருக்கவேண்டும். ஆனால், ரெயில்வேயில் வேலை செய்துகொண்டே, காலேஜுக்கும் போகாமல், போலியான வருகை சான்றிதழை வாங்கி சமர்ப்பித்து.. பிறகு வக்கீல் படிப்பையே படித்து முடித்துவிட்டார்.

முயற்சி

முயற்சி

பின்னர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ய அப்ளை செய்திருக்கிறார்.. ஆனால் அந்த மனுவை ரிஜக்ட செய்துவிட்டனர்.. அதனால், மோகன்தாஸ், உலகநாதன் ஆகிய வக்கீல்களை துணைக்கு வைத்து கொண்டு திரும்பவும் தமிழக பார் கவுன்சிலில் பதிவு விபின் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டார்.

போலி வக்கீல் + கார்டு

போலி வக்கீல் + கார்டு

விஷயம் வெளியே தெரிந்து, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டு போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் தந்தார்.. அதன்பேரில், ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு இந்த போலி வக்கீல் + ரெயில்வே ‘கார்டு' விபினை கைது செய்தனர்.. இவருக்கு உதவியாக இருந்த வக்கீல்கள் மோகன்தாஸ், உலகநாதனையும் போலீசார் கைது செய்தனர்.

போலி சான்றிதழ்

போலி சான்றிதழ்

இந்த வழக்கு மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கமிஷனர் விஸ்வநாதனின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது.. அப்போதுதான், விபின் படித்த அந்த சட்ட கல்லூரி சார்பில் போலியான வருகை பதிவேடு சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தது. விபினுக்கு வழங்கப்பட்டது போலவே அந்த காலேஜில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு போலியான வருகை பதிவேடு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

விசாரணை

விசாரணை

இதை வழங்கியது அந்த சட்டக் கல்லூரி முதல்வர் ஹிமவந்தகுமார் என்ற 54 வயது நபர்.. கடப்பாவை சேர்ந்தவராம்.. இவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படி போலியான சான்றிதழை படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்துள்ளனர்.. இது சம்பந்தமான நடவடிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் இறங்கி உள்ளனர்.. அந்த ஆயிரம் போலி வக்கீல்கள் நம் மாநிலத்தில் எங்கு நடமாடி கொண்டிருக்கிறார்களோ தெரியாது.. அவர்களை நம் போலீசார் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்று மட்டும் தெரிகிறது!

English summary
Law College Principal arrested in Andhra Pradesh for issuing duplicate attendance certificate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X