சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்போன் திருடுவது எப்படி?.. சென்னையில் 6 மாத பயிற்சி+ வேலை+ சம்பளம்.. அதிர வைக்கும் கும்பல்

Google Oneindia Tamil News

சென்னை: செல்போன்களை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சமைப்பது எப்படி, ஆங்கிலம் கற்பது எப்படி, மெக்கானிஸம் படிப்பது எப்படி, இந்தி கற்பது எப்படி, மேக்கப் போடுவது எப்படி என இப்படியே பட்டியல் நீளும் அளவுக்கு நாம் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இப்படி எல்லாவற்றுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையில் சென்னையில் ஒரு கும்பல் செல்போனை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

சென்னை யானைக்கவுனி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒருவரை போலீஸார் ரகசியமாக பின்தொடர்ந்தனர். அப்போது சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்ற அவர் அங்கு வைத்திருந்த செல்போனை அங்கிருந்த நபரிடம் கொடுத்தார்.

தினசரி நாளிதழ்கள்

தினசரி நாளிதழ்கள்

உடனே போலீஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீட்டில் சோதனையும் நடத்தினர். அப்போது அந்த வீட்டில் தெலுங்கு மொழியிலான தினசரி நாளிதழ்கள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

செல்போன் திருட்டு

செல்போன் திருட்டு

ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோழவரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியபடி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.

6 மாத பயிற்சி

6 மாத பயிற்சி

ஆந்திராவில் இருந்து இளைஞர்களை அழைத்து வரும் கும்பல் அவர்களுக்கு செல்போன் திருடுவது எப்படி என்பது குறித்து 6 மாத பயிற்சி வகுப்பை அளித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களுக்கு தெலுங்கு பேப்பரை வாசித்து கொண்டே செல்லும் இந்த கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருட்டு கும்பல்

திருட்டு கும்பல்

செல்போன்களை திருடி வரும் இளைஞர்களுக்கு மாதச் சம்பளத்தையும் ரவி கொடுத்துள்ளார். இந்த போன்களை ஆந்திராவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் திருட்டு கும்பலின் தலைவன் ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

English summary
A 10 of gang from Andhra state arrested for indulging in cellphone theft by giving 6 months training and monthly salary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X